பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/319

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் . 315 இவளைத் தொடரப் போகிறாரே என்று பயந்து, உடனே ஆட்களைவிட்டு அந்தக் குழாயை அடியோடு எடுத்துக்கொண்டு போய்த் துண்டு துண்டாக உடைத்து அகழிக்குள் எறிந்துவிடும் படி செய்துவிட்டேன். ஆகவே, இவள் இறங்கி வந்த குறிப்பே தெரியாமல் போய் விட்டது. இந்த ஊர்ப் போலீஸ் இன்ஸ் பெக்டரை மறுபடியும் பார்த்து அவரிடம் தன் அக்காளைப் பற்றி விசாரித்துவிட்டு ஊருக்குப்போக வேண்டு மென்று இந்தப் பெண் பிரியப்பட்டாள். நான் இந்த ஊர்ப் போலீஸ் இன்ஸ்பெக்டருக்குப் பல தடவை ஆட்களை அனுப்பிப் பார்த்தேன். அவர் ஏதோ ஒர் அவசர விஷயத்தைக் கருதி ஐம்பது ஜவான்களோடு காசா நாட்டுப்பக்கம் போயிருப்பதாகவும், இன்றையதினம் அரண்மனைக் கலியாணத்திற்கு அவசியம் அவர் வந்துவிடுவார் என்றும் சொன்னார்கள். ஆகையால், அவரைக் காணும் வரையில் என் ஜாகையில் இருக்கும்படி நான் இந்தப்பெண்ணிடம் கேட்டுக் கொண்டேன். அதுபோலவே இவள் இருந்தாள். அரண்மனை யிலிருந்து எனக்குத் திருமணப் பத்திரிகை வந்தது. அதற்காக வந்திருந்து, இவ்விடத்திலேயே இன்ஸ்பெக்டரையும் பார்த்து ஷண்முக வடிவின் சங்கதியை அவரிடம் தெரிவித்துக் கலியாணம் முடிந்தவுடன் அவரையும் அழைத்துக்கொண்டு போகலாமென்று நினைத்து நான் வந்து கலியான மண்ட பத்தில் மற்ற ஜெமீந்தார்களுக்கிடையில் உட்கார்ந்தி ருந்தேன். கொஞ்சநேரத்திற்கு முன் ஒருவர் கலியாணத்தை நிறுத்த வேண்டுமென்று கேட்டுக்கொண்டாரல்லவா; அவர் முடிவாகச் சொல்லிவிட்டுப் போன வார்த்தை என் காதில் விழுந்தது. அதாவது, இந்தப் பெண்ணைப் பார்த்து அவர் கமலமென்று அழைத்து, திருவாரூரிலுள்ள இவளுடையதங்கை ஷண்முக வடிவு காணப்படவில்லை என்று தெரிவித்தார். அதைக் கேட்டவுடனே எனக்கு உண்மையெல்லாம் விளங்கி விட்டது. அம்மணிபாயி கமலத்தைத்தான் பூர்ணசந்தி ரோதயமாக மாற்றியிருக்கிறாள் என்ற நிச்சயம் ஏற்பட்டது.