பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/322

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

318 பூர்ணசந்திரோதயம் - 5 விடுதிக்கு அனுப்ப, அவ்விடத்தில் ஷண்முகவடிவும் கமலமும் தங்களது மனத்தில் பொங்கியெழுந்த பிரேமை முழுதையும் வெளிப்படுத்தி தங்களது ரகசியங்கள் யாவற்றையும் மனதை விட்டு ஒருவருக்கொருவர் கூறிக் கொண்டனர். ஷண்முக வடிவு. தனக்குப் பண்டாரத்தினால் நேரிட்ட அபாயத்தின் விவரங் களையும், கலியான சுந்தரத்தினது பழக்கம் ஏற்பட்ட விவரத்தையும் அதன்பிறகுதான் கோலாப்பூருக்குப் போய் வந்த வரலாற்றையும் பிறகு மருங்காபுரி ஜெமீந்தாரினது மாளிகையில் தனக்கு நேர்ந்த விபத்தையும் அவ்விடத்திலிருந்து தெய்வச் செயலாகத் தப்பிவந்த காலத்தில் போலீசார் பிடித்துக் கொண்டதையும், இன்ஸ்பெக்டருடன் சேர்ந்து அம்மணி பாயியின் வீட்டிற்குப்போன வரலாற்றையும் அதன்பிறகு இன்ஸ்பெக்டர் தன்னைத் தனியாக விட்டுப்பிரிந்து போக நேர்ந்தபின் தான் அண்டையிலிருந்த ஒரு மடத்தை அடைந்ததும், அவ்விடத்தில் பழைய பண்டாரம் மறுபடியும் தன்னைப் பலாத்காரம் செய்ய முயன்றது முதல் தான் தன்னை நெருப்பினால் கொளுத்திக் கொண்டது வரையிலுள்ள வரலாற்றையும், பிறகு தான் பாயில் வைத்துச் சுற்றப்பட்டிருந்த நிலைமையில் ஹேமாபாயியினால் காப்பாற்றப்பட்டு முடிவில் வஞ்சிக்கப்பட்டு இளவரசரது வலையில் அகப்பட்டுக் கொண்ட வரலாற்றையும் சவிஸ்தாரமாக எடுத்துக்கூறி, முடிவாகத் தன்னைக் காப்பாற்றிய ரrாமிர்தம் ஜெமீந்தாருடைய மேம்பாடுகளையும், கம்பீர புத்தியையும் பற்றி பன்முறை புகழ்ந்து பேசி, இந்த உலகில் கல்யாண சுந்தரம் ரrாமிர்தம் ஜெமீன்தார் ஆகிய இருவருக்கும் நிகராகச் சொல்லத் தகுந்த ஆண்மக்களே இருப்பது சந்தேகமென்றும், அவர்கள் இருவரும் தமக்குத் தாமே சமமானவர்கள் என்றும் கூறி முடித்தாள். அவள் தனக்கு நேர்ந்த அபாயங்களை எடுத்துக் கூறியதைக் கேட்டபோது, பூர்ணசந்திரோதயம் பெருத்த திகிலும் குலை நடுக்கமும் அடைந்து கலங்கிக் கண்ணிர் விட்டு அழுததன்றி அத்யந்த பிரேமையோடு தனது தங்கையைக் கட்டித் தழுவி,