பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/325

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 321 இருக்கக் கூடாதா என்ற நினைவே அவளது உயிரைப் பருகத் தொடங்கியது. அவ்வாறு அந்தப்பெண்மணிகள் இருவரும் தமது: வரலாறுகளை வெளியிட்டு ஒருவரை ஒருவர் தேற்றி ஆறுதல் கூறிக்கொண்டிருக்க அடுத்த அறையிலிருந்த இளவரசர் நீலமேகம்பிள்ளையை மாத்திரம் தனியாகச் சிறிது துரத்திற்கு அப்பால் அழைத்துக்கொண்டு போய், ‘ஐயா! நீலமேகம் பிள்ளை நான் மறுபடியும் யோசித்துப் பார்த்ததில், எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. இவர்கள் என்னுடைய பெண்கள் என்றால், அதன் உண்மையான ரகசியங்களை எல்லாம் நாம் வெளியிட நேரும். பிறகு யாரும் இவர்களைக் கலியானம் செய்துகொள்ள மாட்டார்கள். மகாராஷ்டிர ஜாதியைச் சேர்ந்த எனக்குப் பிறந்த ஷண்முகவடிவை கலியாண சுந்தரம்பிள்ளை கலியாணம் செய்து கொள்வது கூடாத காரியமாகிவிடும். ஆகையால், இந்த உயிலின் விஷயத்தை வேறே யாருக்கும் சொல்லாமல் மறைத்து வைப்பதே நல்லதென்று நினைக்கிறேன். இவ் விஷயத்தில் இந்தப் பெண்களையும் எச்சரித்து விடுவோம். இன்றைய தினம் கலியானம் - நடத்துவதென்று நான் நிரம்பவும் பிரமாதமான எத்தனையோ ஏற்பாடுகள் செய்துவிட்டேன். ஜனங்களும் லக்ஷக்கணக்இல் வந்து காத்திருக்கின்றனர். அப்படி கூடியிருப்பவர்கள் ஏமாறித் திரும்பிப்போகும்படி நாம் செய்தால் இதில் ஏதோ சூதிருப்பதாக நினைத்து வம்பு பேசி ஹேளனம் செய்யத் தொடங்குவார்கள். ஆகையால், இதே கலியாணமண்டபத்தில் இந்தப் பெண்களிருவருக்கும் கலியாணத்தை முடித்து வைத்து ஜனங்களுக்கு விருந்து நடத்தி அனுப்பி விடுவோம். கலியாணசுந்தரம் பிள்ளை ஏழையாக இருந்தாலும் நல்ல யோக்கியதை வாய்ந்த உத்தம புருஷர். ஆகையாலும், அவரும் ஷண்முகவடிவும் பரஸ்பரம் காதலித்து ஒருவர் விஷயத்தில் மற்றவர் ஒரே உறுதியாக இருப்பதாலும், அவர்கள் இருவருக்குமே கலியாணம் நடத்தி வைத்துவிடுவோம். அதுபோல கமலத்திற்கும் தக்க புருஷர் ஒருவரை நான்