பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 பூர்ணசந்திரோதயம் - 5

தனி விடுதியில் படுத்திருந்தான். லீலாவதி திரும்பி வருவாள் என்ற உத்தேசத்தினால், அவன் வெல் வெட்டு மாடத்தின் வாசல் கதவைத் தாளிடாமல் வெறுமையாக மூடிவைத்து இருந்ததனால், லீலாவதி நேராக மேன்மாடத்திற்குச் சென்று கதவைத் திறந்து கொண்டு வெல்வெட்டு மாடத்திற்குள் போய், அதன் கதவை உள்புறத்தில் தாளிட்டுக்கொண்டு ஒரு மூலையிலிருந்த தனது பஞ்சணையை அடைந்தாள்.

அடைந்தவள் நாற்புறங்களிலும் திரும்பிப் பார்த்துத் தனது பெரிய தந்தை அவ்விடத்தில் இல்லையென்றும், ரதிகேளி விலாசத்தில் சயனித்துக்கொண்டிருக்கிறார் என்றும் நிச்சயித்துக் கொண்டாள். முதல்நாள் இரவிலிருந்து அரும்பாடு பட்டுப் பலவிதமான தேகப் பிரயாசைகளுக்கும், மனவேதனை களுக்கும் இலக்காகி, அன்று முழுவதும் பட்டினி கிடந்து, தனது ஆரூயிர்க் காதலரான பவானியம்பாள்புரம் ஜெமீந்தாரினது பயங்கரமான பிரேதத்தைப் பார்த்து, அதனாலும் பழைய நினைவுகளினாலும் சகிக்கவொண்ணாத அபாரமானதுயரமும் சஞ்சலமும் அடைந்து அலுத்து முற்றிலும் தளர்ந்து போயிருந்தாள். ஆதலால், அவளது உடம்பு மரணவேதனையை உண்டாக்கிக் கொண்டிருந்தது. அவள் முதல்நாள் உடுத்திய பட்டாடையை அன்றைய தினம் மாற்றாமல் அணிந்திருந்தாள். ஆதலால்,அந்த ஆடைகனமாகவும் அசங்கியமாகவும் இருந்தது. ஆகையால், அவ்வாறு அருவருப்போடு தான் சயனித்துக்கொண்டால்,தனக்குத் தூக்கம் உண்டாகாது என்ற நினைவினால் தூண்டப்பட்ட லீலாவதி, அவ்விடத்தில் தன்னைத்தவிர வேறே மனிதர் யாரும் இல்லாததைக் கருதி சிறிதும் லஜ்ஜைப்படாமல் தனது பட்டாடையைக் களைந்து பக்கத்திலிருந்த ஸோபாவின் மீது வைத்துவிட்டுத் தான் அணிந்து கொள்ளக்கூடிய வேறு ஆடை அவ்விடத்தில் ஏதாவது இருக்கிறதா என்று அவள் சுற்று முற்றும் பார்த்தாள். எவ்விடத்திலும் அவள் அணியக் கூடிய சேலை ஒன்று கூடக்