பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 77

ஜெமீந்தார் முன்னிலும் பன்மடங்கு அதிக பிரமிப்பும் ஆச்சரியமும் அடைந்தவராய், “ஒகோ நீதான் கட்டாரித் தேவனோ? உன்னைப்பற்றி நான் வெகுவாகக் கேள்வியுற்றி ருக்கிறேன். இப்பேர்ப்பட்ட செல்வாக்கும் திறமையும் வாய்ந்த மனிதனாகிய உன்னை நான் பகைத்துக் கொள்வது உசிதமல்ல. உன்னுடைய பிரியப்படியே நான் இளவரசரிடம் கேட்டு மன்னிப்பு வாங்கித் தருகிறேன். ஆனால் இன்னொரு விஷயம்! நீ இதுவரையில் எத்தனையோ கொள்ளைகளையும் கொலை களையும் நடத்தி இருக்கிறாயென்று ஜனங்களும் போலீசாரும் சொல்ல நான் கேள்வியுற்றிருக்கிறேன். அப்படியிருக்க, உன்னை இப்போது மன்னித்துவிட்டால் நீ மறுபடியும் உன் வேலையைச் செய்துகொண்டுதானே இருப்பாய். மறுபடியும் உன்மேல் வாரண்டு பிறந்து கொண்டுதானே இருக்கும். அடிக்கடி நான் உனக்காக மன்னிப்புக் கேட்பதென்றால்; இளவரசர் என் வார்த்தையை மதிப்பாரா?’ என்றார்.

கட்டாரித்தேவன், ‘'நான் இனி என் பழைய தொழிலை விட்டு விடுகிறதென்று தீர்மானித்துவிட்டேன். நேற்றைய தினம் இரவில் நீர் எனக்குச் சன்மானம் செய்த பெருத்த திரவியமே என் தலைமுறை தலைமுறைக்கும் போதுமானது. ஆகையால், இனி நான்திருட்டு முதலிய எதிலும் இறங்காமல் யோக்கியனாக நடந்துகொள்ளப் போகிறேன். இனி மறுபடியும் வந்து நான் உமக்கு எவ்விதத் தொந்தரவும் கொடுக்கமாட்டேன். என் வார்த்தையை நீர் உறுதியாக நம்பலாம்’ என்றான்.

ஜெமீந்தார், ‘இவ்வளவுதானே உனக்கு ஆகவேண்டும். சரி; நான் இதை நாளைய தினமே முடித்துக்கொடுக்கிறேன். இவ்வளவோடு நீ இனி எங்கள் ஜோலிக்கே வராமலி

ருப்பாயா?”

கட்டாரித்தேவன், ‘இந்த ஒரு விஷயம் மாத்திரமல்ல.

இன்னொரு விஷயமும் இருக்கிறது. அதையும் நீர் நிறைவேற்றி வைத்து விட்டால், நான் இனி உங்களுடைய ஜோலிக்கே