பக்கம்:பூவின் சிரிப்பு.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



அன்பு


ந்த உலகத்தையே இமையவர் நாடாகச்செய்யக் கூடிய பேராற்றல் எல்லோரிடத்திலும் இருக்கிறது. அதுதான் அன்பு. உனக்கு இன்பம் வேண்டுமா ? அன்பு செய்; இன்பம் தானாகவே வரும். ஆருயிர்கட்கெல்லாம் நான் அன்பு செயல் வேண்டும் என்று இராமலிங்க அடிகள் வேண்டினார். ஏன் ? அதுவே விண்ணாட்டு இன்பந்தரும் என்று அவருக்குத் தெரியும்.

புத்தருடைய முகத்தைப் பார். ஆஹா! எவ்வளவு அன்பு கணிகின்ற அமைதி பொலியும் முகம்; அதில் எல்லையில்லா இன்பத்தின் மலர்ச்சியாகப் புன்முறுவல் தவழ்கின்றது. அந்தத் தெய்வீக வதனத்தைப் பார்ப்பதனாலேயே நமக்கும் அமைதி பிறக்கின்றது. அவருடைய அருளும்தேசக் கையைப்பார்: அதிலிருந்து சாந்தி சுடர் விடுவது தெரியவில்லையா ?

அவருக்கு இந்த அமைதி எதனால் கிடைத்தது? உலக இன்பங்களை யெல்லாம் விரும்புமுன் கிட்டுமாறு தந்தை ஏற்பாடு செய்திருந்தார்; ஆனால் அன்று அவருக்கு அமைதி பிறக்கவில்லை. அரசைத் துறந்து, உலக இன்பங்களை மறந்து, உயிர்களுக்கு அன்பு செய்ய வெளிக்கிளம்பினர். அன்றுதான் அந்த அமைதி கை வந்தது.

சிலுவையிலே அறையப்பட்டிருக்கும் இயேசு முனியின் வதனத்தைப் பார். அதில் என்ன கருணை, என்ன அமைதி உலகிற்கு அன்பு செய்வதிலேயே அவர் தம் வாழ்க்கையை ஈந்தார். தம்மைத் துன்புறுத்தியவருக்கும்