பக்கம்:பூவின் சிரிப்பு.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பழக்கம்

17


வரால் வேலையை விட்டு நீங்கிய பிறகும் இந்தப் பழக்கத்தை விட முடியவில்லை.

இக்காலத்தில் பகடிச் சித்திரம் வரைகிறார்களே, அதில் இந்தப் பழக்கத்தின் விடாப்பிடியை விளக்கி, நகைச்சுவையோடு பல படங்கள் வருவதைப் பார்த்திருப் பீர்கள். எனக்கு ஒரு சித்திரம், நினைத்தாலும் சிரிப்புண் டாக்குவதாக மனத்தில் இருக்கிறது. ஒரு கல்லூரிப் பேராசிரியர். அவருடைய கல்லூரிப் பணி முடிந்து மாலையில் வீடு வந்ததும் தமது சிறிய பூந்தோட்டத்திற்குத் தண்ணீர் ஊற்றுவதும், செடிகளைக் கவனிப்பதும் அவரது பொழுது போக்கு. இதில் அவர் தவறவே மாட்டார். ஒரு நாள் மாலை மழை கொட்டு கொட்டென்று கொட்டிற்று. போராசிரியர், குடையைப் பிடித்துக்கொண்டு செடிகளுக்குக் தண்ணீர் ஊற்றத் தொடங்கிவிட்டார்!

'நான் மறக்கினும் சொல்லும் நா. நமச்சிவாயவே' என்று பாடிய தேவாரப் பெரியாரும் இந்தப் பழக்கத்தின் ஆற்றலையே வெளிப்படுத்துகிறார். கடவுளுங்கூட இந்தப் பழக்கத்தின் வலிமையில் கட்டுண்டு கிடக்கிறாராம். அவருக்கு வரையாது கொடுத்தே பழக்கமாம். அதனால் பாத்திரமறிந்து பிச்சையிடு என்ற நியதியே அவரிடம் இல்லை. தகுதியற்றவனும் அவரை யடைந்து மனமுருகி, 'அப்பா, அருள்வாய்' என்று கையை நீட்டிவிட்டால் உடனே கொடுத்து விடுவார். வானவராயிருந்தாலும் சரி, தானவரா யிருந்தாலும் சரி---'இந்தா' என்பார். பழக்கமே காரணம்!

எங்கள் வீட்டில் ஒர் எருமைக் கடா இருக்கிறது, பார்ப்பதற்கு மொழு மொழுவென்று. 'எருமைக் கடாப் போல' என்ற உவமை பிறப்பதற்கு இதுதான்காரணமோ

பூ.கீ.--2