பக்கம்:பூவின் சிரிப்பு.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



காலம்

27

நம் நாட்டில் ஏற்பட்டன். எகிப்தியர்கள் இந்த ஐந்து நாட்களை எந்த மாதத்திலும் சேர்க்காமல் தனி நாட்களாகக் கூட்டிக் கொண்டார்கள். அதற்குக் காரணமாக ஓர் அழகான கதையுங் கட்டிவிட்டார்கள். ஒரு சமயம் கடவுளுக்கு வான தேவதையின் மேல் கோபம் வந்து, "நீ ஆண்டில் எந்த நாளிலும் பிள்ளை பெறாமல் போகக் கடவாய்' என்று சபித்துவிட்டாராம். அறிவுத் தேவ னாகிய 'தோத்' திற்கும் வானதேவதைக்கும் காதல். அதனால் அறிவுத் தேவன் இந்தச் சாபத்திலிருந்து தப்ப ஒரு வழி கண்டுபிடித்தார். சந்திரனிடமிருந்து அவன் ஒளியில் கொஞ்சம் இரவல் வாங்கி அதிலிருந்து ஐந்து நாட்கள் செய்தார். இந்த நாட்கள் எந்த மாதத்திலும் சேராமல் தனியாக ஆண்டோடு ஒட்டிக்கொண்டிருப்ப தால் இவற்றில் வான தேவதை கருவுயிர்க்கலாம் என்றாகி விட்டது. இவ்வாறு அந்த நாட்டிலே ஆண்டுக்கு 365 நாட்கள் ஏற்பட்டன. இந்தக் கணக்கும் சரியல்லவென்று நாளடைவில் புலனாயிற்று. அதனால் ரோமானியப் பேரரசராயிருந்த ஜூலியஸ் சீசர் என்பார் ஆண்டின் நாட் கணக்கை வேறு விதமாக மாற்றி அமைத்து, ஒரு மாதத்திற்கு ஜூலை என்று தம் பெயரையும் கொடுத்துக் கொண்டார். இந்தப் புதுக் கணக்கில்தான் லீப் ஆண்டு வருகிறது. ஆனால் இந்த லீப் ஆண்டுக் கணக்கு முதலில் சரியாகப் பின் பற்றப்படவில்லை. இதிலும் தவறுகள் காணப்பட்டன. பின்பு 13 ஆம் கிரகொரி என்ற போப் பெரியார், இன்று உலகில் வழக்கத்திலிருக்கும் ஆண்டுக் கணக்கைப் பல அறிஞர்களின் உதவிகொண்டு வகுத்தார். தற்கால விஞ் ஞானிகள் ஒரு ஆண்டில் 365 நாள் 5 மணி 48 நிமிஷம் 45-15 வினாடி இருக்க வேண்டுமென்று சொல்கிறார்கள். அதன்படி பார்த்தால் இன்று வழங்கும் கணக்கில் 10,000