பக்கம்:பூவின் சிரிப்பு.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மறந்த பருவம்

63

 ரத்திலிருந்து ஒன்றுபோலப் புறப்படும் பொருளைப் போன்றல்ல; தனிப்பட்ட சிறப்பு பொருந்திய ஒரு தனி மனிதனாக.

மேலே சொன்ன பாரம்பரியத் தன்மைகளைப் பற்றி உளவியல் ஆராய்ச்சியாளர்களிடையே சிறிது கருத்து வேறுபாடு உண்டு. சிலர், பிறவியால் எத்தன்மையும் வருவதில்லை; வளர்ப்பினால்தான் எல்லாம் அமைகின்றன’’ என்கிறார்கள். வேறு சிலர், வளர்ப்பினால் தன்மைகள் அமைவதை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால் பிறவியிலேயே பல அமைகின்றன என்பதும் திண்ணம் என்கின்றனர்.

இவர்கள் வாதத்தின் முடிவு எப்படி இருந்தாலும் நமக்கு ஒருண்மை ஐயத்திற்கிடமில்லாமல் தெளிவா கிறது. வளர்ப்பினாலேயும் பல தன்மைகள் அமைகின்றன என்பது அது. இதை யாரும் மறுக்கவில்லை. எல்லோரும் ஒரு மனதாக இதை ஒப்புக் கொள்கிறார்கள்.

அவ்வாறு வளர்ப்பினால் ஏற்படும் தன்மைகள் எல்லாம் பெரும்பாலும் குழந்தைப் பருவத்திலேயே உருவாகி விடுகின்றன. ஆதலின் குழந்தைப் பருவமே ஒருவனுடைய வாழ்க்கையின் மிக முக்கியமான பகுதியென ஏற்படுகிறது. அதில் எவ்வாறு உள் ளப்போக்கு அமைகிறதோ அதன்படியே பிற்கால வாழ்வு உருவெடுக்கிறது. அதன் முக்கியத்தைப் பற்றிப் பெரிய பெரிய உளவியலறிஞர்கள் வற்புறுத்திச் சொல்லியிருக்கிறார்கள்.

மறைமனத்தைப் (Unconscious mind) பற்றி முதல்முதலில் ஆராய்ச்சி செய்து, உலகத்தில் பல வாக்குப் பூசல்களுக்கு இடமாக, தம் புதிய கருத்துக்களை வெளியிட்டவர் சிக்மண்ட் பிராய்டு (Sigmund Freud) என்பவர். அவருடைய கருத்துக்களில் பல இன்று ஏற்றுக்