பக்கம்:பூவின் சிரிப்பு.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குறட்டை

75

முழக்கங்களும் செவியில் பாயாது என்கிறார்கள். யாரோ ஒரு தத்துவ ஞானிக்குப் பகைவர் நகரிற் புகுந்து சூறை யாடியதுகூடத் தெரியவில்லையாம். வால்மீகருக்குத் தம்மைச் சுற்றிப் புற்று வளர்ந்து மூடியதே புலனாக வில்லையாம்.

ஆமாம், அவையெல்லாம் மெய்யென்றாலும் என்னு டைய மனம் அப்படி அடங்கவேணுமே! அவர் அப்படிச் செய்தார், இவர் இப்படிச் செய்தார் என்று பேசி என்ன பயன்?

அந்த மனிதனை எழுப்பி அமைதியாக விளக்கிச் சொன்னால் என்ன என்று ஒரு எண்ணம் உதயமாயிற்று. ஆமாம், அதுதான் நல்லது என்று அவரை எழுப்பலானேன். "ஐயா, உங்களைத்தானையா, ஏன் இப்படிக் குறட்டையிட்டு மற்றவர் தூக்கத்தைக் குலைக்கிறீர்?" என்றேன்.

அவர் மெதுவாக விழித்து எழுந்து உட்கார்ந்தார். கண்ணைப் பிசைந்து விட்டுப் பார்த்தார். வாய் கிழிந்து போகுமோ என்னவோ என்று அஞ்சும்படியாக அண் ணாந்து ஆ...ஹ்...என்று ஒரு நீண்ட கொட்டாவியும் விட்டார். பிறகுதான் அவர் மூளைக்கு எனது கேள்வி எட்டியிருக்கும் போலிருக்கிறது, "என்ன?" என்று பதில் வினா எழுப்பினார். "ஏனையா இப்படிக் குறட்டையிட்டுத் தொந்தரவு செய்கிறீர்?" என்று இரங்கிய குரலில் கேட்டேன்.

"நானா குறட்டை போடுகிறேன்? சும்மா தூங்கிக் கொண்டிருப்பவனை எழுப்பி நடு ராத்திரியிலே ஏன் வாயைப் பிடுங்குகிறீர்? கல்யாண விருந்து ஆட்டி வைக்கிறதாக்கும்" என்று பேசிவிட்டு மறுபுறம் திரும்பி