பக்கம்:பூவின் சிரிப்பு.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5

எனது கட்டுரைகளில் மேலே குறிப்பிட்டுள்ள இலக்கணங்கள் எந்த அளவிற்கு அமைந்துள்ளன என்பதைப் படிப்பவர்களே தீர்மானம் செய்யவேண்டும். நான் முயன்றிருக்கிறேன்; நல்ல நூல்களின் மேலுள்ள ஆர்வமும், தனியே உலாவச் செல்வதிலுள்ள ஆர்வமும் அம் முயற்சிக்குத் துணை புரிந்திருக்கின்றன என்று மட்டும் கூறிக்கொள்ள விரும்புகிறேன். அதற்காகவே இம் முன்னுரை.

ஒரு சிறு குறிப்பு : இந்த ஐந்தாம் பதிப்பிலே மூன்று புதிய கட்டுரைகள் இடம் பெறுகின்றன. வணக்கம்.

பெ. தூரன்.