பக்கம்:பூவின் சிரிப்பு.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சாவில்லை

78

என்ற அவருடைய பாட்டு மட்டும் எல்லோருடைய காதிலும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

அருணகிரிநாதரின் வாக்கிலே மந்திர சக்தி உண்டு அவர் பாடுகிறார்:

தண்டாயுதமும் திரிசூ லமும்விழத்
தாக்கியுன்னைத்
திண்டாட வெட்டி விழ விடு
வேன் செந்தில் வேலனுக்குத்
தொண்டா கியஎன் னவிரோத ஞானச்
சுடர்வடிவாள்
கண்டாய டா அந்த காவந்து
பார்சற்றென் கைக்கெட்டவே

என்று யமனை அறைகூவி அழைத்து மார் தட்டுகிறார்.

மரணப் பிரமாதம் நமக்கில்லை என்று பெருமிதமாக அரச தோரணையிலே அவர் உலகுக்கு அறிவித்தார். ஆனால் அவர் எங்கே?

நாமார்க்குங் குடியல்லோம்
நமனை அஞ்சோம்

என்றார் மற்றொரு தெய்வக் கவியான நாவுக்கரசர்.

அவரும் இறந்துதானே போனார் என்று ஒரு ஐயப் பிரியர் கேட்கிறார். சாவே இல்லையென்று பிதற்றிக் கொண்டிருந்த எத்தனையோ பேர் செத்துவிட்டார்கள்: சாவில்லை என்பதெல்லாம் வெறும் பேச்சு என்று மேலும் அவர் விளக்கவுரை செய்கிறார்.

ஐயம் மிகப் பொல்லாதது. எதிலும் அதற்கு நம்பிக்கை கிடையாது. ஆனால், அதனால் எத்தனையோ நன்மைகள் உண்டாகியிருக்கின்றன. ஐயமில்லாவிட்டால் அறிவு விளக்கம் இல்லை; முன்னேற்றம் இல்லை. அதன்