பக்கம்:பூவின் சிரிப்பு.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

93

பூவின் சிரிப்பு




மனம் படைத்த மனிதன் தனிச்சிறப்புப் பெற்றிருந்தாலும், அந்த மனத்திலே பதுங்கிக் கிடக்கும் விலங் குணர்ச்சிகளை அவன் அடக்கி ஆள முடியாவிட்டால் அவனுடைய விஞ்ஞான முன்னேற்றமெல்லாம் பயனற்ற தாகிவிடும்.

பாரதக் கதையை வியாசர் எழுதிய அந்நாளிலேயே ஓருண்மை மனிதனுக்குத் தெரிந்துவிட்டது. போரால் தீமையைத் தவிர நன்மை யாருக்கும் ஏற்படுவதில்லை என்பதுதான் அந்த உண்மை. தோல்வியுற்றவனுக்கு மட்டும் போர் துன்பங் கொடுக்கவில்லை. வெற்றி பெற்றவனுக்கும் அது துன்பத்தையே தருகின்றது. பாரதப் போரில் மிகப் பெரிய வெற்றி பெற்ற பாண்டவர்கள் பின்னால் என்ன கண்டார்கள்? எங்கு பார்த்தாலும் அழுகைக் குரலே அவர்கள் காதில் ஒலித்தது. போரில் மடிந்தவர்களின் துன்பம் முடிந்துவிட்டது; ஆனால் எங்கள் துன்பம் முடிவற்றதாக இருக்கிறது. போரில் இறந்தவர்களின் பிரிவாற்றாமையால் வருந்துகின்றவர் களின் துன்பத்தை எங்களால் தாங்க முடியவில்லை’ என்று அவர்கள் கவலையுற்றதாக பாரதம் கூறுகிறது. அறத்தை நிலைநாட்ட எழுந்த போருக்குப் பிறகு எங்கு பார்த்தாலும் அறநெறிக்குமாறான செயல்கள் குறைபாடுகள் மிகப் பலவாக எழுந்தன ஆதலால் போரால் நன்மை என்பதே இல்லை என்கிற பேருண்மையை வியாசர் தெளிவாக எடுத்துக் காண்பிக்கிறார்.

இருந்தாலும் மனிதன் இதை நன்கு உணர்ந்து கொள்ளவில்லை. அவனுடைய விலங்குணர்ச்சி மங்க வில்லை. உலக வரலாற்றிலே என்ன காண்கிறோம்? போரில்லாத ஒரு நூற்றாண்டு எங்காவது உண்டா? பிற ருடைய அனுபவங்களால் பயனடையக் கூடிய வல்லமை மனிதனுக்குத்தான் உண்டு என்று பெருமையோடு பேசு-