பக்கம்:பூவும் கனியும்.pdf/12

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவும் கனியும்



வதங்கிப் போகும் மலர்கள். அந்தக் குழந்தைகளை நாம் தட்டிக்கொடுத்து வளர்த்தால்தான், நல்ல குழந்தைகளாக, அறிவுள்ள குழந்தைகளாக நன்றாக வளர்வார்கள், தைரியமாக வாழ்வார்கள்; திறமையோடு வாழ்வார்கள். அதை விட்டுவிட்டு `உங்களுக்கு எங்கே படிப்பு வரும்’ `ஏன் சனியனே தொல்லை கொடுக்கிறாய்ய்?’ `ஏன் என் உயிரை வாங்குகிறாய்?’ மண்டே, மக்கே’ என்று சொன்னால் மாணிக்கமும் மக்காகப் போகும். நம் வாயில் அத்தகைய சொற்கள் வரக்கூடாது. யார் பேரில் வெகுளி இருந்தாலும் அச்சொற்கள் வரக்கூடாது குழந்தைகள் நடுவிலே அவைகளே மறந்துகூடச் சொல்லாதீர்கள். ஏன் என்றால் குழந்தைகள் நம்மைப் பார்த்துத்தான் தூற்றக் கற்றுக்கொள்கிறார்கள்.

பெரியவர்களே வழிகாட்டிகள்

குழந்தைகள் வரவேற்பிலே கேட்டார்கள். வெளி நாட்டிற்குப் போனீர்களே, அங்கே பார்த்தவைகளைச் சொல்லுங்கள்’ என்று கேட்டார்கள். அத்தனையும் சொல்ல நேரம் இல்லை. ஒன்றுமட்டும் சொல்கிறேன். இங்கிலாந்திலே குழந்தைகள் மணி மணியாக இருந்தன; நல்ல பழக்கத்தோடு இருந்தன. பச்சைக் குழந்தைகள்கூட ஒன்றுக்கு இரண்டுக்கு தெருவில் இருப்பது இல்லை. ஏன் இருப்பது இல்லை? அவைகள் மட்டும் அதிசயமான

—6—

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூவும்_கனியும்.pdf/12&oldid=492891" இலிருந்து மீள்விக்கப்பட்டது