பக்கம்:பூ மணம்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107 உருவம் அவன் முன் நின்றது. நின்று தன் பேரில் 'குற்றப்பத்திரிகை படிப்பதுபோலத் தோன்றியது. அத் துடன் விடவில்லே. அவள் நினைவு அவன் மனத்தை ரம்பமிட்டு அறுத்தது. செய்யத் தகாததொன்றினைச் செய்து விட்டதுபோல, ஆசைகாட்டி மல்லிகாவை மோசம் செய்துவிட்டது போன்றதொரு மனமயக்கம் ராஜேந்திரனே வாட்டி வதைத்தது. என்றும் தன்னுள் ஏற்பட்டிராத நரக வேதனையின் நிலையை-உணர்வை அவன் உள்ளுணர்வு எடுத்துக் காட்டியது. உலேக்களம் அனைத்துக் கொண்ட இரும்புத்துண்டென, அவன் இதயம் வெந்தது. அப் பப்பா...! இரவு நன்ருக அயர்ந்து துரங்கவேண்டிய அசதி உடம்பில் இருந்தும், ராஜேந்திரனுக்கு உறக்கம் கொள்ள வில்லே. பல நினைவுச் சிதறல்கள்-அனைத்தும் மல்லிகாவை மையமிட்டுச் சுழன்றன. # மனத்திற்குச் சற்றேனும் தெளிவு வேண்டியிருந்தது. அன்றைக்கு வந்திருந்த மாதச் சஞ்சிகை ஒன்றை எடுத்துப் பிரித்தான் அவன். அட்டைப் படத்தைப் பார்த்துவிட்டு, அதற்கான கதையைப் பிரித்தான். 'சிதைந்த காதல்’ என்ற மகுடத்தின் கீழ் மல்லிகா? என்ற பெயரைக் கண்ட அவனுக்கு ஐம்புலன்களும் புலனடக்கம் செய்துவிட்டனவோ என்ற வகையில், சூன்யவெளி இடைவெளி காட்ட மூளை மரத்துவிட்டாற் போலிருந்தது முகம் குப்பென்று வியர்த்துக் கொட்டியது. மேல்லிகா ! யார் இந்த மல்லிகா ? ஒருகால் அதே மல்லிகாவேதாணுே ?? கதை அவன் கருத்தைக் கயிறுகட்டி இழுத்தது. அவன் உடன்பட்டான். - கதை முடிந்ததும், ஐயோ என்ற அலறல் வெடித்துக் கிளம்பியது. * f

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/113&oldid=835335" இலிருந்து மீள்விக்கப்பட்டது