பக்கம்:பூ மணம்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 36 எங்கோ ஓடிவிட்டார்...! பாவம், பூமாவைப்பற்றியும் இன்றுவரை ஒன்றும் தெரியவில்லே. அவளுக்குக் குழந்தை பிறந்த செய்தி மட்டும்தான் தெரிந்தது. அவளேயும் குழந் தையையும் பார்க்கப் பலமுறை பல இடங்களுக்குச் சென் றேன்; காணமுடியவில்லே. இந்நிலையில் அவள் பச்சைக் குழந்தையுடன் எவ்வளவு துன்பப்படுவாளோ ?’’ விஜயா, உங்களுக்குப் பூமாவைத் தெரியுமா ? அவள்தான் ராஜேந்திரனின் மனேவியா? அப்படியென்ருல் அவள் பாக்கியம் செய்தவள். ஆனல், நீங்கள் கூறும் இந்த இடியைக் கேட்டால்...ஆமாம்; ஏன் அவர் அப்படி ஓடிவிட்டார் ? எங்கே ஓடினர் ? எவ்வளவு நாட்களா و د?rژنئrpېته هئ 'மல்லிகா, அதுதான் காரணம் புரியவில்லை. அவர் ஓடிப்போய் மாதங்கள் பல ஒடிப்போய் விட்டன. ஆமாம்: ராஜேந்திரனே உங்களுக்கு...??

  • விஜயா, ராஜேந்திரனை எனக்குத் தெரியும். அது ஒரு கதை...?’ என்று நிறுத்திப் பெருமூச்சு விட்டாள் மல்லிகா. அடுத்த நிமிஷம் அவள் கதை சொன்ள்ை. கதை அல்ல அது; அவள் வாழ்க்கையின் கண்ணிர்ப் படலம் அது:

முன், ராஜேந்திரன் மதுரையில் வேலே பார்த்து வருவதைத் தந்தை சொல்ல அவள் கேட்டிருந்தாள். தப்பித் தவறி அவன் கண்ணில் தான் பட்டு வைக்கக் கூடாதே என்று அடிக்கடி மனம் மருகி நிற்பாள். கடைசி வரை அவள் அவன் கண்ணில் படவில்லே. அப்படித்தான் அவள் எண்ணியிருந்திருப்பாள். ஆனல் அன்று ஒரு நாள் ரிக்ஷாவில் சென்ற மல்லிகாவைக் கண்டதும் தானே ராஜேந்திரனின் வாழ்க்கை நிலவு வானத்திலே கிரகணம் கறை கண்டது...? அதுதானே பூமா-ராஜேந்திரன் தம்பதி களின் பிளவுக்கு, பிரிவுக்கு அடித்தளம் பரப்பிவிட்டது...! ராஜேந்திரனேப் பற்றிப் பேச்செழுந்ததும் அவள் தன் உணர்ச்சிக் கொந்தளிப்பிற்கு அணையிட முடியவில்லே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/132&oldid=835377" இலிருந்து மீள்விக்கப்பட்டது