பக்கம்:பூ மணம்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127 விஜயாவிடம் தன் உள்ளத்தைத் திறந்து பேசிள்ை. முதல் காதல் முறிந்ததிலிருந்து தனக்கு வாழ்க்கையே முறிந்து விட்டது என்ருள் மல்லிகா, - விஜயா, ராஜேந்திரனின் விபரீதச் செய்கைவியப்பாக இருக்கிறது. அபலே பூமாவைக் கைவிட்டு விட்டாரே. பர்வம்? பூமாவைப்பற்றி விபரம் அறிந்து சொல்லுங்கள். அவளிடம் எனக்கு அனுதாபம் மேலிடு கிறது. என்னலான ஆறுதல் கூறுவேன். அவளி-ம் பேசுவது மூலம் எனக்கும் அமைதி ஏற்படும். அவள் பிள்ளைக் கனியமுதை நான் கண்டால் எனக்கு எவ்வளவோ மகிழ்ச்சியாயிருக்கும். பூமாவையும் அவள் கணவர் ராஜேந்திரனேயும் மறுபடியும் இணக்க என்னலானதைச் செய்வேன். விஜயா, ஏனே எனக்குத் தினமும் வாழ்க், கையில் விரக்தி மோதி நிற்கிறது. பல முறை நானே என் உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றேன்; முயல்கிறேன். என் மனம் என்ன ஒரு சமயம் குத்திக் காட்டுகிறது. மறுசமயம் என்னே ஏளனம் செய்கிறது. மூன்ரும் தடவை என்ன ரம்பமிட்டு அறுக்கிறது. இந்த வேதனையை என்னல் பொறுக்கவே முடியவில்லை. எனக்குள் ஏதோ ஒரு மாற்றம் தேவைப்படுகிறது. இருண்ட என் வாழ்க்கைப் பகுதியில் சிறு விண்மீன் ஒளிரும் ஒளிப்பகுதியாகவேனும் அமைக்கக்கூடிய ஒரு கட்டம் தேவைப்படுகிறது. அந்த அனுபவத்தை-தேவையை இக்கணமே நான் உணர் கிறேன். என் மனக்குரங்கின் பித்தலாட்டத்தில் அரை குறையாகவிருக்கும் என் நாவல்கூட எங்கே பூர்த்தி பெருதோ என்று கூடக் கலங்குகிறேன்.அப்படியாகிவிட்டது என் உள்ளம். விஜயா, எனக்கு மாற்றமளியுங்கள். அந்த மாற்றம் பூமாவின் மூலம் உதயமாகவேண்டும். அவள் குழந்தையின் தரிசனம் இந்த அபலைக்குக் கிட்டச் செய்யுங்கள்...”* x மல்லிகாவிற்குத் தன் நினைவுவர நெடுநேரமாகியது. அவள் கண்களினின்றும் கண்ணிர் ஆருகப் பெருகிக்கொண் டிருந்தது. விஜயாவின் கண்களிலும் நீர் முட்டி நின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/133&oldid=835379" இலிருந்து மீள்விக்கப்பட்டது