பக்கம்:பூ மணம்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 பொழுது சாய்ந்தது. விஜயா விடை பெற்றுக் கொண்டாள். எப்படியும் தேடிக் கண்டு ஆவன செய்து பூமாவைக் குழந்தையுடன் அழைத்து வருவதாகக் கூறிச் சென்ற விஜயாவின் உறுதியில் தேறுதல் கண்டது மல்லிகா வின் மனம். பழைய சம்பவங்களேக் கிளறிப் பார்க்க நேர்ந்ததில், அவள் இதயம் வெகுவாகப் புண்பட்டது. எல்லா வற்றிற்குமே ஆறின கஞ்சி பழங்கஞ்சி என்று இருந்துவிட மனம் இடங்கொடுக்கிறதில்லேயே...! நாட்கள் சில ஆயின. விஜயாவின் வரவை மல்லிகா ஆவலுடன் தினமும் எதிர்பார்த்தாள். அத்துடன் பூமாவை, அவள் பசுங் குழவியை அதிக ஆசையுடன் எதிர்பார்த்தாள். ஆனல் அது நாள்வரை அவள் நிகணத்தபடி அவர்கள் வரவில்லே. அவள் மனம் உடைந்தது. அவள் சாவின் சந்நிதியில் நின்ருள். தான் உயிருட னிைருந்து என்ன ஆகப்போகிறது ! கருகிய மொட்டு என் றென்றுமே இனிக் கருகிய மொட்டுத்தானே...” என்ற ஒரே தினேவுதான் அவன் ஆட்டிப் படைத்தது. கடைசியில் அவள் முடிவுக்கு அனுசரணையும் செய்தது. என்றென்றும் நித்திய கன்னிகையாகப் பூமிதேவிக் கும் பாரமாய் இருப்பதில் என்ன பலன்’ என்று எண்ணி எண்ணி நெட்டுயிர்த்த அவளுக்குச் சாவு ஒன்றே இன்ப முடிவாகத் தோன்றியது. கூப்பிடு தூரத்தில் ஒடிக் கொண்டிருந்த வைகையை மனதில் கொண்டு நிறுத்தினுள். அன்னே தன்னை வரவேற் பது போன்ற பிரமை எழுந்தது. ‘. . . . . பிறைமதியின் பின்னணியாக மின்னின புல தாரகை கள். தேவகன்னிகை முத்துப் பல்லொளி காட்டிப் Aன்னகை மலரைத் தரவி விடுவதைப்போல. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/134&oldid=835381" இலிருந்து மீள்விக்கப்பட்டது