பக்கம்:பூ மணம்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143 துறந்து, துணையைத் துறந்து, துணை சுமந்த கருவைத் துறந்து இரவுடன் இரவாகப் புறப்பட்டான் ! இயற்கை ஓவியன் முகில் திரையில் உயிர்ச் சித்திரங் கள் சிலவற்றைத் தீட்டி அழகு பார்த்துக் கொண் டிருந்தான். மேஜையில் கவி தாகூரின் கீதாஞ்சலிச சிரித்துக் கொண்டிருந்தது. ராஜேந்திரனின் பார்வை அதில் அமைந் தது. பிச்சைக் காரி ஒருத்தி வீடு வீடாய்ப் பிச்சை எடுக் கிருள். வழியில் மன்னவனைப் போல ஒரு உருவம் தெரிகிறது. அவளுக்கு ஒரு ஆசை. அவனிடம் ஏதாவது பிச்சை கிடைக்குமென்று அண்டினள். ஆனல் அந்த மன்னர் மன்னன் பிச்சைக்காரியிடம் கை நீட்டி யாசகம் கேட்கிருன். அவள் திகைப்புடன் பையிலிருந்து சிறு நெல் மணி ஒன்றை எடுத்து நீட்டுகிருள். அவள் மாலேயில் பையைப் பிரித்தபோது பையில் அழகிய பொன்மணி இருந்தது. நீ கைநீட்டி என்னிடம் யாசகம் கேட்டபோது என்னிடமிருந்த அத்தனேயையும் உனக்குக் கொடுத்துவிட எனக்கு மனம் இருந்திருக்கக்கூடாதா?...? என்று பிச்சைக் காரி ஏங்கினுள். உதட்டோரத்தில் புன்னகை நின்றது அவனுக்கு. ‘பூமா!’ - அவன் இதயம் அழைத்தது. அவள்...? பூமாவைத் தேடிப் பிடித்து அழைத்துவர வேண்டு மென்பதர்க ராஜேந்திரனுக்குச் சில தினங்களாக நினைவு. தூண்டியிருந்தது. அதற்காகவே அவன் அவளுக்குக் கடித மும் எழுதினன். ஆனல் அவள் இல்லாமையால் திரும்பி விட்டது. இது அவனுக்கு மாள்மாட்டாத வேதனையையும், மீளாத பயத்தையும் தந்தது. வந்த ஆரம்பத்திலேயே ஸ்டுடியோ உரிமையாளர் சந்திரசேகரனும் பூங்குழலியும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/149&oldid=835414" இலிருந்து மீள்விக்கப்பட்டது