பக்கம்:பூ மணம்.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f 76 எப்படிக் காண்பது? என்று காண்பது? எங்கே காண்பது? அவளேக் காண முடியுமல்லவா? பூமாவிற்குத் தெரியுமே! ஹார்ன் சப்தம் கேட்டது. போர்டிகோவிலிருந்து கார் புறப்பட்டது. டைரக்டர் ராஜேந்திரன் எழுந்தான்; எதிரே நிறுத்தியிருந்த பெல்ஜியம் திலேக் கண்ணுடியில் அவன் உருவம் விழுந்தது. அவனுக்கே தன் அலங்காரமும் ஆனந்தமும் புதிதாகப்பட்டது. தன் அன்பு மனைவி பூமாவைக் காணப் போகிருனல்லவா? புறப்பட்டான் ; கார் புறப்பட எத்தனம் செய்தது. அதே சமயம், எதிர்த்து வந்து நின்ற பிளஷரைவிட்டு மாயா இறங்கி வருவதைப் பார்த்தான் ராஜேந்திரன், தேடிச் சென்ற மூலிகை காலில் சிக்கிவிட்டதைப் போல! “வணக்கம் ஐயா? ? அவள் கோலக்கரங் குவித்தாள். செந்தாமரை முகத் தில் சிரிப்பு இதயத்தின் பிரதிநிதியாகி நின்றது. மதர் விழிப்பனிப் பார்வையில் ஒரு மருட்சி; அவள் குரல் நடுக்கம் சொல்லியது. பெளடரின் செந்தூரம் பாய்ந்திருந்த அவள் முகத்தில் வியர்வை முத்தார்த்திருந்தது. 'வ-ண-க்.க-ம், 22 டைரக்ட்ருக்குப் பதில் வணக்கம் செலுத்த அவ்வளவு எளிதில் நா வரவில்லை; அதற்குத் தன்னைத் தயார்ப் படுத்திக் கொள்ளவில்லே என்று சொன்னலும் சரி. தொட்டது தொட்டாற் போலத் தொடங்கப்பெறும் சம்பவம் போல் இது. ஆனல் எதற்குமே முறை என்ற ஒன்று உண்டு. நடிகை மாயாவை ஒரு முறை பார்த்தான். வழக்க மாகத் தன் பூமாவைப் பார்க்கும் பரிவும் பாசமும் அதில் இடம் பெற்றிருந்தது. மோகினிப் பெண்ணே நினைவுபடுத் தியது அவள் தோற்றம். அவன் கண்டதில்லே அத்தகைய வகள. ஆனல் மாயாவை மோகினிப் பெண் உருவில் அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/182&oldid=835482" இலிருந்து மீள்விக்கப்பட்டது