பக்கம்:பூ மணம்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 இந்நிகழ்ச்சியின் காரணமாகப் பாதிக்கப்பட்டான் ராஜேந்திரன். நிதமும் விளேயாடத் துணையாக நின்ற பூமாவை அவன் அப்புறம் பார்க்க முடியவில்லே. ஆனுலும் அப்போதைய அவன் அறியாப் பருவத்தின் பிஞ்சு நெஞ்சம் பூமாவைக் காணுமல் தவித்தது. அத்தி பூத்தமாதிரியாக அவள் தண்ணிர்க் குடமேந்திச் செல்லும்போது, அவன் தளர்தடையிட்டுக் குறுக்கே பாய்ந்து அவளேச் சந்திப் பான். அவன் வலியப்போய் அவளிடம் பேசுவான் ; ஆனல் அவள் ஒரு சிரிப்பைச் சிந்திவிட்டுப் பஞ்சாகப் பறந்துவிடுவாள். இது பெண்ணின் பேதமையோ...பருவத் தின் புதுமைப்பாடமோ ? நாணத்தின் முதல் கணேயோ? அல்லது பெற்றேரின் கட்டளை யா...? அதற்கப்புறம் இப்போது தான் ராஜேந்திரன் பூமாவை நேருக்குநேர் வைத்துப் பார்த்தான். உள்மனம் அவள் வரவில் மகிழ்ச்சி கண்டது. ‘அத்தான், என் அப்பாவைக் காப்பாற்றுங்கள். பழைய பிளவை, பூசலே மறந்து, எங்களே மன்னித்து விடுங்கள்...? என்று பூமா புலம்பிய சொற்கள் அப்பொழு தும் அவன் கதுகளில் எதிரொலிக்கக் கேட்டான். அவன் கண்களில் நீர் கலக்கம் கண்டது. - பூமாவுடன் சென்று ராஜேந்திரன் அவள் அப்பாவைச் சந்தித்தான். அவனேக் கண்டதும் தணிகாசலம்-பூமா வின் தந்தை அவனிடம் கண்ணிர்விட்டு மன்னிப்புக் கோரி ஞர், கடந்ததை மறக்கும்படி. தணிகாசலத்தின் சிகிச் சைக்கு ஆவன செய்து பூமாவையும் அங்கு துணை வைத்துத் திரும்பினன் அவன். மனம் ஒரு பச்சைப் பாலகன், கண்ட கண்ட பலகாரங் களேயெல்லாம் தனக்கு வாங்கித் தரும்படி அடம் பிடிக்குமே குழந்தை, அதுபோல ராஜேந்திரனின் மனமும் கண்ட கண்ட நிகழ்ச்சிகளிலெல்லாம் தாவி முடிச்சுப் போட்டுத் தீர்த்தது. *

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/50&oldid=835572" இலிருந்து மீள்விக்கப்பட்டது