பக்கம்:பூ மணம்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9i தத்தை இணைக்கும் அன்புப் பாலமாக-இதயத்திற்கு அமைதியூட்டும் சமய சஞ்சீவியுமாகின்றது ! அடுத்த கடிதத்தைப் பார்த்தாள். அது அவள் கணவன் ராஜேந்திரன் பார்வைக்கு உரியது. முன்னும் பின்னும் திருப்பினள். அதில் சந்திரன்’ என்ற பெயரைக் கண்டதும், அவனே அது படிக்கத் தூண்டியது. தன்னே வாழ்விக்க வந்தவர்களுள் சந்திரனும் ஒருவர் என்பதைப் பூமா என்றுமே மறக்க முடியாதல்லவா? ‘‘அன்புள்ள ராஜா, வணக்கம். நலம்; நாடுவதும் அதுவே. இங்கு-பூவைமா நகரில் எங்கள் நண்பர் குழாம் உங்கள் மண விழாவின் நினைவுப் பரிசில் ஒன்றைத் தயாரித்து நாளே அனுப்ப முடி விட்டிருக்கிறது. தங்கள் புதுவாழ்வு எப்படியிருக்கிறது ? நாடோடிப் பாடலின் பரவசத்தன்மை இருக்குமென்று: நம்புகிறேன். வரும் மாதம் எங்கள் பள்ளியில் முதியோர் கல்வி விழாவிற்குத் தாங்கள் தலைமை தாங்க வேண்டும். அழைப்பு தனியே அனுப்புகிருேம். பூமாவுக்கு என் வணக்கம் சொல்லுங்கள். சந்திரன்.” பூமா ஓர் இளம் மலர். கதிரவனது கதிர் முத்தத்தில் மடலவிழும் கமலம் போல. அன்பு காணுமிடத்து உள்ளம் பற்றியிழுக்கப்பட்டுச் சொக்கிப் போய்விடும் இயற்கை நலமுடையவள். ‘அன்பு’ என்ற தாரக மந்திரம் அவளது லட்சியக் கோட்டில் நிழலாடியது. துள்ளும் குது கலத்துடன் கணவனின் தனி அறையி னுள் அடியெடுத்து வைத்தாள். வாயிற்படி மேலிருந்த நோ அட்மிஷன்” போர்டைக் கவனித்தாள். எனக்குக் கூடவா இந்தச் சட்டம்’ என்று மனதிற்குள் விளையாட் டிற்குக் கூறிச் சிரித்துவிட்டு ஓடினள். கலைக்கண் காட்சி மாதிரி அழகாக காட்சி கொடுத்த அந்த ட்ரெஸ்லிங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/97&oldid=835671" இலிருந்து மீள்விக்கப்பட்டது