பக்கம்:பூ மரங்கள்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வசந்தம் மலர்ந்தது 1 * * யிலே கோயிலுக்கு வந்தாளும். கூப்பிட்டனுப்பிளுளே, என்னன்னு எட்டிப் பார்ப்போம் என்றுகூடத் தலையைக் காட்டலே. அது வேறே சந்தேகத்தை உண்டாக்குது' என்ருள். 'சரி, செல்லம் பண்டிதனை நான் கூப்பிட்டு அனுப்பு றேன். இந்தா பாரு நீலாவதி, நீ வந்து செல்லுவதற்கு முன்பே, தீ எப்படிப் பிடித்தது, யாரு வச்சா என்று கண்டு பிடிப்பதுன்னு முடிவுகட்டிவிட்டேன். எங்கே பார்க்கலாம்னு பண்ணைப்பிள்ளைவாள் வீராப்பு பேசியிருக்காக. பார்க்க லாமேன்னு தான். நீ வேறே வந்து சொல்வியாச்சு இனி மேல் என்ன? உனக்கு யார் மீதாவது சந்தேகமிருந்தால் தெளிவாச் சொல்லிப்போடு என்ருர். என்க்கு யார் மீதும் சந்தேகமில்லே. இல்லாதது பொல் லாததைச் சொல்வானேன்! என்ருள் நீலாவதி. பிறகு தன் வீடுபோய்ச் சேர்ந்தாள், தாண்டவராய பிள்ளை வண்டிக்காரனுக்கு உத்திரவிட் டார். பந்தல்கார கந்தத்தேவனைக் கூட்டிவா முதல்ல்ே. பிறகு சாயங்காலமாக செல்லம் பண்டிதரை நான் வரச் சொன்னேன்னு சொல்லிட்டு வா? - . 'ரொம்பச் சிக்கலான விஷயமாகத்தான் முடியும் போலி ருக்கு. நீலாவதி சொன்னது போலே இருக்குமோ, அதஞலே தான் ஒருவேளை பண்ணையார் தீ தானகவே பிடிச்சிருக்கும்னு அடிச்சுப் பேசி வாருரோ...என்ன எழவோ, விசாரிக்க விசா ரிக்க தானுத் தெரிஞ்சிட்டுப் போகுது!’ என்று தனக்கே சமாதானம் சொல்விக்கொண்டார் அவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/112&oldid=835709" இலிருந்து மீள்விக்கப்பட்டது