பக்கம்:பூ மரங்கள்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துரங்கு மூஞ்சி மரம் . 149 கனி சதைப்பற்றுள்ள நீண்ட கனி இனிப்பாக இருக் கும். குதிரை, ஆடு மாடுகளும், அணிலும் விரும்பி உணனும. வங்காளத்தில் சாலே ஒரங்களில் வளர்க்கப்படுகிறது. விதைகள் பெரும்பாலும் ஜீரணிக்கப் படுவதில்லை. இக் கனிகளைத் தின்னும் பசுக்கள் நிறைய பால் கறக்கு மென்பர். இந்தியாவில் வெப்பமிக்க மாநிலங்கட்கு ஏற்றது. வட இந்தியாவில் பனிதாங்காமல் பட்டுப் போகக் கூடும். இது மிகப் பெரியதாகக் கிளேத்து வளர்வதால் வீட்டுப் புறங்களுக்கு ஏற்றதல்ல, நெடுஞ்சாலேகட்கு ஏற்ற நிழல் மரம். தோட்டக் குறிப்பு: விதைகள் விழுந்து மழை நாளில் முளேக்கும், கிளே நட்டும் பயிரிடலாம், விரைவாக வளரும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/155&oldid=835803" இலிருந்து மீள்விக்கப்பட்டது