பக்கம்:பூ மரங்கள்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருங்கொன்றை பெல்டோபோரம் இனர்மே பழைய பெயர்கள் (ஒத்தபெயர்) : பெருஜீனியம்; செகால்பினியா இனர்மே; பெல்டோபோரம், பெ. ராக்ஸ்பர்கியை, செம்புக்காய். குடும்பம் : லெகுமினேசியே (பாப்லியோசிையே) பொதுவாக வழங்கும் இந்தியப் பெயர்கள் : தமிழ்-பெருங்கொன்றை, இயல்வாகை. தெலுங்கு-கொண்டசின்தா பெல்டோபோரம் என்ற கிரேக்கச் சொல்லே அடிப்படை யாகக் கொண்டது. அச்சொல்லுக்குக் கேடயம் போன்ற இதன் காயைக் குறிக்கும்போலும். இனர்.மீ என்பது "காவலற்ற" என்று பொருள்படும். இனர்மிஸ் என்ற லத்தீன் சொல்லிலிருந்து வந்தது. பெருஜீனியம் என்பது அதன் காய். துரு நிறமானது என்பதைக் குறிக்கும். ராக்ஸ்பர்கியை என்பது கல்கத்தா தாவர தோட்டத்திற்கு 1751 முதல் 1815 வரை மேலாளராக இருந்த வில்லியம் ராக்ஸ்பர்க் என்பவரின் பெயரைப் பின்பற்றியதாகும். செம்புக்காய் என்பது அதன் செம்பு நிறமான காயைக் குறிக்கும். வளருமிடம்: இது இலங்கையைச் சேர்ந்தது. பீஹார், வங்காளம், மேற்குமலைப் பகுதிகளில் வளரும். இயல்புகள் : கொஞ்சமாக இலே உதிர்க்கும் எடுப்பான மரம். நன்கு கிளேத்துப் பரந்து வளரும் நிழல் மரம். கருஞ் சாம்பல் நிறப் பட்டை யுடையது. இருமுறைக் கூட்டிலே அகன்று இறகு போன்றிருக்கும். ஜனவரி மாதத்தில் இலே உதிரும். பிப்ரவரியில் இளம்தளிர் தோன்றும். அப் போது பளபளப்பான மஞ்சள் நிறப் பூக்களைக் கொட்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/157&oldid=835807" இலிருந்து மீள்விக்கப்பட்டது