பக்கம்:பூ மரங்கள்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15.2 பூ மரங்கள் ஆண்டிற்கு இருமுறை பிப்ரவரி முதல் மே வரையும், செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலும் பூக்கும். பூ ஒரு வித மணமுடையது. கிளே நுனியில் கலப்பு மஞ்சரியில் பூக்கும். பூக்கள் சிறிது நேரம்தான் மரத்திலிருக்கும். அதனுல் கம்பளம் விரித்தாற்போல மரத்தடியில் விழுந்து அழகாகக் காட்சி தரும். காய் முதிர்ந்து செம்பு நிறமான கனியாகும். அவை இஃலயுதிர்ந்த மரக்கிளைகளில் அடுத்த ஆண்டு வரை தொங்கிக் கொண்டிருக்கும். பிறகு அவை கருத்து ஒடிந்து விழும். இது சிறந்த அழகு ஒரல் தரும் மரம். பூங்காவிற்கும் தோட்டங்களுக்கும், சாலேகளுக்கும் ஏற்றது. இதனை செம்பூ மரத்துடன் கலந்து நட்டு வளர்த்தால் இவை பூக்கும்போது மஞ்சளும், சிவப்புமாகக் கண்ணேக் கவரும். இதன் அடிமரம் மரப்பெட்டி வேலைக்கு உதவும். தோட்டக் குறிப்பு: விதையிலிருந்தும், கிளே நட்டும் சுலப மாகப் பயிரிடப்படும்: இது மிக விரைவாக வளரும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/158&oldid=835809" இலிருந்து மீள்விக்கப்பட்டது