பக்கம்:பூ மரங்கள்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளிரிசிடியா (கோண மரம்) கிளிரிசிடியா மாகுலேடா, கிளிரிசிடியா செபியம் குடும்பம் : லெகுமினேசியே (பாப்லியோனேசியே) இந்தியப் பொதுப் பெயர்கள் : தமிழ்-கோண மரம் தெலுங்கு-மாத்ரே, மதுரா கிளிரிசிடியா என்பது இதன் விதையிலிருந்து எலிப் பாஷாணம் தயாரிப்பதால் இதற்கு எலிக் கொல்லி என்று பொருள்படும். அதல்ைதான் இப்பெயர் வந்தது. மாகு லேடா என்பது புள்ளி விழுந்த’ என்று பொருள் உடைய தாகும். இதன் இலையடியில் சிறு சுரப்பிகள் இருக்கிற படியால் இப்பெயர் பெற்றது போலும். இதன் பழைய பெயர் (ஒத்த பெயர்) கிளிரிசிடியா செபியம். செபியம் என்பது வேலி என்று பொருள்படும். இம்மரத்தை வேலிக்கு வைப்பதால் இப்பெயர் பெற்றது. வளருமுடம்: தென் அமெரிக்காவைச் சேர்ந்தது. மகா ராஷ்டிரம், சென்னே, கேரள மாநிலத் தோட்டங்களில் வளர்கிறது. இயல்புகள்: மிக விரைவாக வளரக்கூடிய அழகிய சிறு மரம். இலைகள் இறகன்ன இலையுடையது. இலைகளைக் கழிக்காது விட்டால் மரம் மிகவும் கவிந்து கீழ்நோக்கி அழகாக வளர்ந்து காட்சி தரும். பிப்ரவரி மாதத்தில் இலே உதிரும். இளஞ்சிவப்பு நிறப் பூக்கள் பிப்ரவரி, மாாச் மாதங்களில் தோன்றும். கனி நீண்டு தட்டையாக இருக்கும். அவை மார்ச் மாதக் கடைசியில் மரம் முழுவதும் காணப்படும். இம்மரம் அழகுக்காகவும் நிழலுக்காகவும் வளர்க்கப்படும். இதில் நைட்ரஜன் சத்து அதிகமாக இருப்பதால் இது சிறந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/161&oldid=835817" இலிருந்து மீள்விக்கப்பட்டது