பக்கம்:பூ மரங்கள்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனிச்சம் (இந்தியப் பூக்களில் தலைசிறந்தது) லாகர்ஸ்ட்ரோமியா பிளாஸ்ரீஜினே பழைய பெயர் (ஒத்த பெயர்) லாகஸ் ரோமியாஸ் பெசியோசா குடும்பம் : லித்ரேசியே வேறு பெயர்கள் : அரசிப் பூ, கிரேப் பூ, மோடா பாண்டரா பொதுவாக வழங்கும்: இந்தியப் பெயர்கள் : இந்தி-அர்ஜூன, ஜாருல் அஸ்ஸாம்-அஜார், அஜ்ஹார், திங்டோதால்டோ வங்காளி-அஜார், ஜருல், ஜாருல் கன்னடம்-சல்லா, ஹோலிடா சல்லா ஹோலி-டாலவலா மலையாளம்-அடம்பு, செம்மருட்டா, கடல் பூ, மணி மருது மராத்தி-தமன், பண்டாரலெண்டி மோடா-பாண்டரா ஒரியா-படோலி, ஆரி பஞ்சாபி-ஜாருல் தமிழ்-அனிச்சம், தடலி தெலுங்கு-வரகோகு லாகர்ஸ்ரோமியா என்ற சொல் மாக்னஸ் லாகர்ஸ் ரோம் என்ற ஸ்வீடிஷ் தாவர அறிஞரின் பெயருடன் தொடர்புடையது. பிளாஸ்ரிஜினே என்பது அரசியின் பூ என்று பொருள்தரும். வளருமிடம்: ஒரிசா, வங்காளம், அஸ்ஸாம், தென் னிந்தியா முதலிய விடங்களில் வளர்கிறது. அஸ்ஸாம், கேரளா, பர்மா, இலங்கை காடுகள் இதனுடைய தாயகம் என்பர். ஆற்றேரங்களிலும், சதுப்பான நிலங்களிலும் வளரும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/169&oldid=835832" இலிருந்து மீள்விக்கப்பட்டது