பக்கம்:பூ மரங்கள்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆடன்சோனியா டிஜிடேட்டா குடும்பம் : மால்வேசியே (பெரு நூக்கமரம்) வேறு பெயர்: கோரக்சின்க் பொதுவாக வழங்கும் இந்தியப் பெயர்கள் : இந்தி-கோரகி, இமிலி, கோரம், லிச்சோரா குஜராத்தி-கோரக்சின்க் தமிழ்-பெரு நூக்கமரம் ஆடன் சோனியா என்பது ஆதன்சன் என்ற பிரஞ்சு தாவர அறிஞரின் பெயரைப் பின்பற்றியது. டிஜி டேட்டா என்பது கைவிரல்கள் என்று பொருள்பட்டு அதன் 5 சிற்றிலைகளைக் குறிக்கும். கோரக் நாத் என்ற குரு இம் மரத்தடியில் தமது சீடர்களுக்குப் போதித்த தாகக் கூறப்படுகிறது. அதல்ை இதற்கு கோரக்சின்க் என்ற பெயர் வந்தது. இதனுடைய காயின் ஒடு தண் னிர் குடுவையாகப் பயன்படுகிறது. வளருமிடம் : ஆப்பிரிக்காவைச் சேர்ந்தது. அரேபியர் களால் இந்தியாவிற்குக் கொண்டுவரப்பட்டது. ஒளரங்க பாத்திலும், சென்னேக்கருகிலும் சில சிறந்த மரங்களைக் காணலாம். வறண்ட மாநிலங்களில் நன்கு வளரும். இயல்புகள்: இது மிகப் பெரியதொரு இலேயுதிர் மரம். அடிமரம் கண்ணுடிச் சீசாபோல் இருக்கும். மேலே குறுகி வளரும். இம் மரத்தில் படுக்கையாக வளரும் பல கிளே கள் காணப்படும். கையின் விரல்களைப் போன்று இதன் இலகள் உள்ளன. வெயில் நாளில் இலேகள் உதிரும். இம்மரம் பார்க்க விசித்திர வடிவாக இருக்கும். பூக்கள் பெரியவை; நீண்ட காம்பில் தொங்கிக் கொண்டிருக் கும். அக விதழ்கள் பாலாடைபோன்ற நிறமுடையவை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/173&oldid=835840" இலிருந்து மீள்விக்கப்பட்டது