பக்கம்:பூ மரங்கள்.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவரசு , 173 வெண்டைச் செடியின் பூவைப் போன்றவை. இதல்ை இதனை வெண்டி (பெண்டி) என்பர். பூக்கள் தனித்து தட்ப நாளில் மலரும். கணி: தட்டையான, உருண்டை வடிவானது. சாலே ஓரங்களுக்கும், தோட்டங்களுக்கும் ஏற்ற நடுத்தர உயர முள்ள நிழல் மரம். பட்டையில் இருந்து நார் உரிக்கலாம். மரம் துப்பாக்கிக் கட்டைகளுக்கும், வண்டிச் சக்கரத் திற்கும் பயன்படும். விதையில் ஒருவித எண்ணெய் உண்டு. வேர் சத்துப் பொருளாக உட்கொள்ளப்படும். மலேயாவில் இம் மரத்தின் வைரத்திலிருந்து இதய நோய்க்கு மருந்து செய்வர். கிளே வைத்தும், விதை போட்டும் பயிரிடலாம். விரை வாக வளரும். உப்புச் சத்து நிறைந்த நிலத்தில் வளரும். இது ஆண்டு முழுவதும் நிழல் தந்து பூக்கும் சில மரங் களுள் ஒன்று. எங்கும் எப்படியும் வளர்ந்துவிடும் இதை, மலேப் பகுதிகள் தவிர வேறெல்லா இடங்களிலும் வளர்க்கலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/180&oldid=835853" இலிருந்து மீள்விக்கப்பட்டது