பக்கம்:பூ மரங்கள்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலை வேம்பு (மணி மரம்) மீலியா அசிடாரக் குடும்பம் : மீலியேசியே பொதுவாக வழங்கும் இந்தியப் பெயர்கள் : இந்தி-டேக், ட்ரீக், பாகெய்ன் வங்காளி-மகாநீம் மலையாளம்-வேய்ம்பு மராத்தி-பேஜ்ரி தமிழ்-மலைவேம்பு, பூவேம்பு தெலுங்கு-தரக்க வேப்ப மீலியா என்பது சாம்பல் நிறமான என்று oபாருள் படும் கிரேக்கச் சொல்லில் இருந்து பிறந்தது. அசிடாரக் என்பது தனித்து வாழும் என்று பொருள்படும். அசாத்டாரக்றிை என்ற பாரசீகச் சொல்லில் இருந்து பிறந்தது. | வளருமிடம்: இமயத்தைச் சேர்ந்த பகுதி களி லும், சிவாலிக் மலேச்சாரலும் இதன் தாயகம். பர்மா, சைன, பாரசீகம் முதலிய நாடுகளிலும் காணப்படும். பலுசிஸ் தானத்திலும் தானே வளர்கிறது. பஞ்சாபில் கிணறு க&ளச் சுற்றி அதிகமாக வளரும். இந்தியாவின் பல பகுதிகளிலும் நட்டு வளர்க்க வேண்டிய மரம். இயல்புகள்: நடுத்தர உயரமுள்ள இலேயுதிர் மரம் (15-25 அடி). மிகவும் விரைவாக வளரும், கரிய சாம்பல் நிறப்பட்டை நீள வாட்டில் பிளவு பட்டிருக்கும். கூட்டு இலை பெரனே போன்றது; டிசம்பர்-ஜனவரியில் இலே உதிரும். மார்ச் மாதத்தில் தளிர்கள் பூக்களுடன் தோன்றும். மிருதுவான மணமுள்ள பூக்கள் மார்ச், ஏப்ரல் மாதங்களில் கொத்துக் கொத்தாக மலரும். உருண்டையான வழவழப்பான காய்கள் குளிர்காலத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/186&oldid=835864" இலிருந்து மீள்விக்கப்பட்டது