பக்கம்:பூ மரங்கள்.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ம8ல வேம்பு I S1 முதிர்ந்து சுருங்கிய கனியாகி மரத்திலேயே பலநாள் இருக்கும். ஒவ்வொரு கனியிலும் 5 விதைகள் உண் டாகும். விதையில் துளையுண்டு. அதல்ை அவற்றை மாலேயாகக் கோர்க்கலாம். கனியில் நச்சுப் பொருள் உண்டு. விதையில் இருந்து எண்ணெய் எடுத்து மருந் தாகப் பயன்படுத்துவர். இலே, பூ, வேர் பல்வேறு நோய் கட்கு மருந்தாகும். இம்மரம் அழகுக்காகவும், நிழலுக் காகவும் பயிரிடப்படும். வேர் மேலேயே இருப்பதால் சுலபமாகக் காற்றில் விழுந்துவிடும். ஆகவே சாலே ஒரங்களுக்கு ஏற்றதன்று. தோட்டக் குறிப்பு: விதை முற் றிய வுட ன் முளைக்கப் போடவேண்டும். விதைபோட்ட ஒராண்டிற்குள் 8-10 அடி வளர்ந்துவிடும். இளங் கன்றுகள் மூடு பனி தாங்க மாட்டா. பட்டை கசப்பாக இருப்பதால் இதனை எலி தின்னது; செல் அரிக்காது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/188&oldid=835868" இலிருந்து மீள்விக்கப்பட்டது