பக்கம்:பூ மரங்கள்.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாவல் யூஜினியா ஜாம்போலான பழைய பெயர் ஒத்த பெயர்: சைசிஜியம் குமினி குடும்பம் : மிர்ட்டேசியா வேறு பெயர்கள் : ஜாவாபிளம், ஜாம்பூல், இந்திய ஆல்ஸ்பைஸ் பொதுவாக வழங்கும் இந்தியப் பெயர்கள்: இந்தி-ஜாமன், ஜாமுன் வங்காளி-காலாஜாம் மராத்தி-ஜாம்பூல் தமிழ்-நாவல் தெலுங்கு-நெரெடு "யூஜினியா’ என்பது சவாய் நாட்டு இளவரசர் யூஜீன் என்ற 17ஆம் நூற்றண்டு தாவர அறிஞரைக் குறிப்பிடு கிறது. ஜாம்பொலான என்பது இதன் போர்ச்சுகீசியப் பெயர். சை.சி.ஜியம்’ என்பது சுசுகாஸ்’ என்ற கிரேக்க மொழிச் சொல்லில் இருந்து வந்தது. இதன் பொருள் இரட்டை என்பது. வளருமிடம்: இந்தியாவில் வறண்ட பகுதி தவிர, மற்ற எல்லாவிடங்களிலும், பர்மா, இலங்கை, மலாயா முதலிய விடங்களிலும் வளர்கிறது. தென்னிந்தியாவில் 6,000 அடி உயரமுள்ள மலேப் பகுதிகளிலும் காணப்படுகிறது. புத்தமதத்தினருக்குப் புனிதமான மரம், கோயில்களைச் சுற்றி வளர்க்கப்படும். இயல்புகள் : என்றும் தழைத்திருக்கும் பெரிய மரம். பளபளப்பான இலைகள் சற்றுக் கறுத்த கிளைகளின் நுனி யில் உண்டாகும். பட்டை, கறுத்த சாம்பல் நிறமானது. இ8லகள் தோல்போல் வழவழப்பாக இருக்கும்; எதிர் நிர லாக அமைந்திருக்கும். நரம்புகள் நன்கு தெரியும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/198&oldid=835891" இலிருந்து மீள்விக்கப்பட்டது