பக்கம்:பூ மரங்கள்.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடம்ப மரம் 195 கிளே நுனியில் தனித்து உண்டாகும். புறவிதழ்த் தொகுதி வெளிர்ப் பச்சையாகவும், உதிராமலும் ஒட்டிக்கொண்டும் இருக்கும். அகவிதழ்த் தொகுதி ஆரஞ்சு நிறமானது. பூக்கள் ஜூன்முதல் ஆகஸ்டுவரை மழை நாளில் மலரும். இதன் பொய்க்கனி 2-2; அங்குலம் வரை பருத்துச் சதைப்பற்றுடன் இருக்கும். மழைக்கால முடிவில் காய் முதிர்ந்து கனியாகும். கனி சற்றுப் புளிப்பானது. எனி னும் நல்ல மணமுள்ளது. வெளவால் முதலிய விலங்கு கள் விரும்பியுண்ணும். அதனுல் விதைகளும் பரவும். பொன்னிறப் பந்து போன்ற இதன் நறுமணம் மிக்க பூக்களுக்காக இம்மரம் வளர்க்கப்படுகிறது. பெண்கள் மழை நாளில் இப்பூக்களைத் தலையில், குடி மகிழ்வர். கும்ப லாக இவற்றை நட்டு வளர்த்தால் நன்றக இருக்கும். இதன் மரம் சாதாரண பேப்பர் செய்ய உதவும். இலே, தழை உரமாகப் பயன்படும். தோட்டக் குறிப்புகள்: இம்மரம் ஈரமுள்ள இலையுதிர் காடு களில் நீர்தேங்காத இடங்களில் நன்கு வளரும். முதல் 6-8 ஆண்டுகட்கு விரைந்து வளரும். முழு வளர்ச்சி அடைய 20 ஆண்டுகள் பிடிக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/202&oldid=835901" இலிருந்து மீள்விக்கப்பட்டது