பக்கம்:பூ மரங்கள்.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உருளைக்கிழங்கு மரம் சொலானம் கிராண்டிபுளோரம் பழைய பெயர் (ஒத்த பெயர்). சொலானம் ரைட்டியை குடும்பம் : சோலனேசியே சொலானம் என்பது, நிம்மதி தரக் கூடிய அலலது மயக்கப் பொருள் என்று பொருள் தரும் சொலாஷியம் என்ற லத்தீன் சொல்லேப் பற்றியது. ரைட்டியை என் பது அமெரிக்க உயிரியல் அறிஞர் சார்ல்ஸ் ரைட் (1811-85) என்பவரின் நினைவாக எழுந்தது. அவர் ஹாங்காங்கில் இதனைச் சேகரித்தார். வளருமிடம்: தென் அமெரிக்காவில் உள்ள, பெரு பொலி வியா நாடுகளே இதன் தாயகம். இயல்புகள்: இது ஒரு புதர் அல்லது சிறு மரம். 30-40 அடி உயரமானது. நீலமும் ஊதாவும் கலந்த பெரிய பூக்கள் தனியாகவும் கொத்தாகவும் ஆண்டு முழுவதும் மலரும். இலே முட்டை, வாள் அல்லது இதய வடி வானது. அடிப்புறத்தில் நீண்டமுள், மயிர் அடர்ந்திருக் கும். தோட்டங்களில் இம்மரம் இதன் பூவிற்கும் அழகிய இலக்குமாக வளர்க்கப்படும். கனி சிறிய உருண்டை யாக இருக்கும். தோட்டக் குறிப்புகள்: விதையில் இருந்தும், கிளே நட்டும் வளர்க்கப்படும். பாதுகாப்பான, நிழல் உள்ள இடங் களில் 30 அடி உயரம் வரை வளரும். ஆண்டு முழுவதும் பூக்கும் சில மரங்களுள் ஒன்று. பொதுப் பூங்காவிற்கும், வீட்டுத் தோட்டங்களுக்கும் சிறந்த மரம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/208&oldid=835912" இலிருந்து மீள்விக்கப்பட்டது