பக்கம்:பூ மரங்கள்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. கறுகிப் போனவை கல்யாண அமர்க்களங்களில் ஆழ்ந்து, எதிர்பாராத விபத்துக்குட்பட்டு, சமாதி நிலே யடைந்த அந்த வீட்டில் புகையும் உள்ளத்தினராய்ப் புழுங்கியவர்கள் யாருமே துரங்க வில்லை, எப்படி உறங்க முடியும்? - அவர்களுக்காகக் காலம் காத்திருக்கவா போகிறது! அதன் வேகத்திலே ஒடிக்கொண்டிருந்தது அது. செங்குளம் ஊரைக் கறுந்திரைகொண்டு போர்த்தியதுபோல் மூடியிருந்த இருள் விலக விலக, ஆயிரமாயிரம் ஒளிமீன்கள் போல் நீந்திய வெள்ளிகள் வானக்கயத்தின் ஆழத்திலே அமிழவும், பக லொளி வெள்ளம் பாய்ந்து பரவ ஊரிலே உயிர் சிலிர்த்துக் கொடுத்தது. மனிதர்கள் நடமாட்டம் ஏற்பட்டது. இரவிலே எரிந்த வீட்டைப்பார்க்க வந்தவர்களும் வராத வர்களும் விடியற்காலம் அதன் நிலைமையை ஆராய வந்தார் கள். குளத்திற்கும் வாய்க்காலுக்கும் போகிற பாதையில் சிவன் கோவில் தெருவும், அதன் மூலை வீடான நீலாவதி அக மும் இருந்ததால் வேடிக்கை பார்க்க விரும்பியவர்களுக்கு வசதியாக இருந்தது. பார்த்தவர்களில் பலருக்கு ஏமாற்றம் தான்! வீடு புடிச்சு எரியலேயா? பந்தல் தாணு எரிஞ்சுது!" என்று புலம்பி விட்டுப் போளுர்கள். பகலில் அழகும் மகிழ்வும் ஆடம்பரமும் கலந்து குழக்பிக் கலகலத்து, இரவில் பேரொளியிலும் பெரும் ஆராவரத்தி லும் அடிபட்டுத்தவித்த வீட்டு முகப்பு-பந்தல் நின்ற, பிறகு எரிந்த இடம்-இப்போது கறுகிய கட்டைகளும் சாம்பிவு 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/26&oldid=835981" இலிருந்து மீள்விக்கப்பட்டது