பக்கம்:பூ மரங்கள்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. மாதவி அவதாரம் இப்போது நீலாவதியைப் பற்றி, அவளது குளுதிசயங் கள், கனவுகள் திட்டங்கள் பற்றிக் கொஞ்சம் அளக்க வேண் டியது அவசியமாகிறது. செங்குளம் ஊரில் செல்வாக்குப் பெற்றவர்கள் தலை முறை என்ருெரு பட்டியல் தயாரிப்பதாளுல், பெரிய வீடு, பணக்காரத்துவம், பரம்பரைப் பெருமை, பெரிய மனு ஷத் தனம் முதலிய கண் துடைப்பு வியாப்ாரங்களுக்கு முக்யத்து வம் கொடாமல் உண்மையாகவே கணக்கெடுப்பதானுல், அந் தப் பட்டியலில் முதலில் குறிப்பிடப்பட வேண்டிய பெயர் அலமேலு அம்மாளுடையதே. அவள் சிவன் கோயில் தாசி தான். என்ரு லும் அவளுக்கு அந்த ஊரில் செல்வாக்கு அதிக மிருந்தது. பணக்காரர்கள் முதல் அந்த ஊர் தனிப்பெரும் மடத்தின் சுவாமிகள் வரை அலமேலு அம்மாளை கெளரவித் தார்கள். அவளைப்பற்றி இழிவாக யாரும் பேசியதில்லை. அவளிடம் சொத்து தாளுகச் சேர்ந்தது. அவள் தனது சொத்துக்கும் பெயருக்கும் குலமுறைக்கும் வாரிசாகத் தயாரித்து விட்ட அழகுப்பதிப்பு தான் நீலாவதி, நீலாவதி சதிர் என்ருல் அப்போது ரொம்பப்பிராபல்யம். பத்துப் பனிரண்டு மைல் தூரத்தில் உள்ள ஊர்களில் இருந் தெல்லாம் ஜனங்கள் கும்பல் கும்பலாக வருவார்கள் புதிய தலைமுறையில் செங்குளத்துச் செல்வாக்குடையவர்கள் லிஸ் டில் அம்மாளுக்கும் அதிகமான மதிப்பு அடைந்தவள் மகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/32&oldid=836017" இலிருந்து மீள்விக்கப்பட்டது