பக்கம்:பூ மரங்கள்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வசந்தம் மலர்ந்தது 49 தாள். பூத்த பனி மலர்மீது ஏறி வழுக்கி விழும் கரு வண்டு கள் போல அவள் விழிகள் அம்முகத்தில் தள்ளாடிச் சுழன் றன. பிறகு லக்ஷ்மிமீது பாய்ந்து, நீலாவதி மேல் தாவி, பண்ணையார் முகத்தில் படிந்தது பார்வை. - என்னம்மா ராசாத்தி, உனக்கு என்ன செய்யுது?" என்று அன்பு:கணிந்த குரலில் விசாரித்தாரவர். - ஊம் என்ற சிறு குரலும், தலையசைப்பும்தான் கிடைத்த எதிரொலி. மறுபடியும் கண்களை மூடிக்கொண் உாள் ராஜம். - கொஞ்சம் காப்பி கொடுத்துப் பாரேன். லக்ஷ்மி, காப்பி எடுத்து வா’ என்று உத்திரவிட்டார் பண்ணையார். லக்ஷ்மி காப்பி எடுத்து வந்தாள். இந்தா கண்ணு, இதைக் குடி. குடிச்சிட்டுப் படுத்துக்கொள். என்று சொல்லி, தாய் மகளைத் துக்கி தன் மீது சாயும்படி இருக்க வைத்து காப்பி கொடுத்தாள். அதைக் குடித்து விட்டுக் கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்தாள் ராஜம். என்னம்ம்ா செய்யுது உனக்கு: 'ஒன்னுமில்லே. மயக்கமா வந்துது என்று மெல்லிய குரலில் சொன்னன் ராஜம், "நான் தான் சொல்லுதேனே-இது வியாதியே இல்லே. வேறே குத்தம் தான். லச்சுமி, பிறகு போயி நீ இவளைக் கூட்டிட்டு வா...விபூதில்லாம் மந்திரிச்சுப் போடுவாளே நம்ம காயங்குளத்தா..." பிச்சியா?" என்று கேட்டாள் லக்ஷ்மி. "ஆமா மா. பிச்சியைத்தான் கூட்டிட்டு வா. சாயங் காலத்திலே...ராசம், நீ படுத்துக்க என்று அவளை மெது வாகப் பிடித்து படுக்கச் செய்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/50&oldid=836056" இலிருந்து மீள்விக்கப்பட்டது