பக்கம்:பூ மரங்கள்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வசந்தம் மலர்ந்தது | 95 நின்ருள். இருவருக்கும் இத்தகைய திகைப்பு என்றுமே ஏற் பட்டதில்லை. - தான் மருந்து வைத்துவிட்டது இவருக்குத் தெரிந் திருக்குமோ-அல்லது, நம்ம பண்ணையாருக்கு இப்போ போயி மோக மருந்து கொடுக்கத் துணிந்தோமே--என்று மன அரிப்புதான் அவளே சகஜமாகப் பேசவிடாமல் தடை செய்கிறது என்று அவர் நினைத்தார். பண்ணையார் ஏன் கலகலப்பாகப் பேசவில்லை? பொன் னம்மா விஷயத்தைச் சொல்லியிருப்பாளோ ஒரு வேளை: பெருமையடிக்காமலிருக்க முடியுமா அவனால்! அதனுல் அவர் மனம் குழம்பி இருக்கிருர் போலும் என்ற தினப்பு படர்ந்தது நீலாவதி உள்ளத்தில். என்ன பேசுவது? "உன் மகள் மீது எனக்குப் பிரியம் இல்லாமலா போச்சு! எத்தனே தடவை உனக்கு படிச்சுப் படிச்சுச் சொன்னேன்; கெஞ்சாத வகையெல்லாம் கெஞ்சிக் கேட்டேனே. அப்பவே நீ ஊம்’னு வாயசைத்திருந்தால், இவ்வளவு வீண் தொல்லே களுக்கு இடமே இல்லையே. சரி, போவுது ராசாத்தியை எங்கே? . இப்படியா கேட்பது அவளிடம் போய் ஏன் ராஜம் தலைகாட்டவேயில்லே? நாளுகத் தேடவேண்டும், கேட்கட்டுமே என்று திட்டமோ? பண்ணையார் மனம் நினைவுத் தறியில் எண்ணப் பாவு ஒட்டிக்கொண்டிருந்தது இந்தக் கதியிலே. "உங்கள் பெண்டாட்டி பொன்னம்மா இருக்காளே, அந்த ராங்கிக்காரி தானே நம்ம வீட்டுக் கல்யாணப் பந்த விலே தீப் பிடிக்கும்படி மந்திரிச்சிருக்காளாம்? செல்லம் பண்டிதனேக் கேளுங்களேன். இப்போ அவ வயிறு குளிர்ந் திருக்கா? இப்படியா கேட்பது இவரிடம்? - இந்தத் திகைப்பு நீலாவதிக்கு. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/96&oldid=836152" இலிருந்து மீள்விக்கப்பட்டது