பக்கம்:பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/13

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

11

களைக் கண்டு பிடித்த விஞ்ஞானியாக, அரசியல் உலக ராஜ தந்திரியாக, அரசியல் அமைப்புகளின் உறுப்பினராக, சுதந்தரப் போராட்ட தளபதியாகப் பணியாற்றி, தான் பிறந்த நாட்டுக்காக செயற்கரிய சேவைகளைச் செய்த மாபெரும் மனிதனாக விளங்கி மறைந்தவர்தான் பெஞ்சமின் ஃபிராங்ளின் என்ற மாமேதை.

இத்தகைய பேராற்றல் பெற்ற அவர், ஒரு செல்வச் சீமான் வீட்டிலே பிறந்தவர் அல்லர். சாதாரண மெழுகுவர்த்திகளையும், சோப்புக் கட்டிகளையும் செய்து பிழைக்கும் பிராங்ளின் என்ற பெற்றோர்களுக்கு ஏழை மகனாக 1706-ம் வருடம் அமெரிக்காவிலே உள்ள போஸ்டன் என்னும் நகரிலே பிறந்தார் பெஞ்சமின் ஃபிராங்ளின் என்ற மனிதகுல மாணிக்கம். சிறு வயதிலே எவ்வளவு துன்பங்களையும் வறுமைகளையும் அனுபவிக்க முடியுமோ அனைத்தையும் அனுபவித்து வாழ்ந்த மனிதர் அவர்.

பெஞ்சமின் குடும்பம் பதின்மூன்று பேர்கள் கொண்ட ஒரு பெரிய குடும்பம். அவர்கள் அனைவரும், போஸ்டன் நகரின் இரவு காவலுக்காக மெழுகுவர்த்திகளைச் செய்து பிழைக்கும் குடும்பமாக உழைத்து வந்தார்கள். கூடவே சோப்புக்கட்டிகளையும் செய்து பிழைத்தார்கள். ஏழைக் குடும்பம் தான். ஆனாலும் ஒரு தகுதியோடு வாழும் குடும்பமாகும்.

ஏனென்றால், அக்காலகட்டத்திலே போஸ்டன் நகருக்கு தெரு விளக்குகள் கூட கிடையாது. தெரு வீடுகளுக்கு எண்கள் கூட போட்டிடும் அரசு ஊர் அமைப்புகள் இல்லை. பெஞ்சமின் வீட்டு வாசல் முன்பு ஓர் ஊதா நிறப் பந்து உருவத்தில், “இங்கே மெழுகுவர்த்திகள், சோப்புக் கட்டிகள் விற்பனைக்குக் கிடைக்கும்,” என்ற பெயர்ப் பலகைதான் தொங்கும். இந்த அடையாளப் பலகையைப் பார்த்துதான் போஸ்டன் நகர மக்கள் அவற்றை விலைக்கு