பக்கம்:பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/28

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

பெஞ்சமின் ஃபிராங்ளினின்

டிபோராவேத் திருமணம் செய்து கொண்டு, பிலடெல்பியா நகரக்குடிமகனாக நிலை பெற்றார். அதனால், நண்பர்கள் கூடத்திலேயே அவர் நடமாடலானார்! எப்போது பார்த்தாலும் ஒரு கூட்டம் அவர் வீடு முன்பு கூடியிருந்தபடியே காணப்படும்.

பெஞ்சமின் வாழ்ந்த வீடு மக்கள் கூட்டம் கூட்டமாகத் திரளும் சந்தப் பேட்டையிலே இருந்த வீடு! அந்த வீட்டை எப்போது கூட்டி, சுத்தப்படுத்தினாலும் குப்பைக் கூளங்கள் காற்றினால் அடித்துக்கொண்டு வந்து குவிந்தபடியே பாணப்படும். அவ்வளவு ஜன நெருக்கமும், போக்குவரத்துகளும் உள்ள சந்தை வெளிப்பகுதி.

சந்தைக்கு வருகின்ற மக்கள் தண்ணீர் தேங்கும் குட்டைகளிலும், சேறும் சகதிகளிலும், குப்டைப் புழுதிகளிலும், குழியும் குண்டுமாக உள்ள பாதைகளிலும் தான், நடமாடி வரும் சூழ்நிலை அப்போது இருந்தது. எந்த அரசும் மக்கள் நடக்கும் அந்த பாதைகளைப் பற்றிக் கவலைப்பட்டு சீரமைப்புச் செய்ய முன்வரவில்லை. மக்கள் தினந்தோறும் மிகவும் கஷ்டப்பட்டு நடக்கும் சூழ் நிலைகளை பெஞ்சமின் அடிக்கடி, கண்டு மனவேதனை கொண்டார்.

தன்னிடம் வந்து போகும் நண்பர்களையும், அச்சகப் பணியாளர்களையும், சில கூலிவேலையாட்களையும் வைத்து சந்தைவெளிக்கு ஒரு நடை பாதையைப் போட்டார்.

நடை பாதை உருவானதும், சந்தை வெளிக்கு வரும் மக்கள், சேறும் சகதியுமில்லாமல், காலில் ஈரம்படாமல், வரவேண்டும் என்பதற்காகத் தனது பத்திரிக்கையிலே எழுதினார். தெருக்கள் கற்களைக் கொண்டு தளமேடை நடைபாதைகளை அமைக்கும் படியும், கற்களைப் பரவி மண் கொட்டுமாறும் தனது பத்திரிகையில் எழுதினார்,