பக்கம்:பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/43

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

41

கட்டத்தைப் பெற்று வந்தது என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

பெஞ்சமின் ஃபிராங்ளின் ஒருநாள் பிலடெல்பியா வயற்காடுகளிலே வந்து கொண்டிருந்தார். அப்போது, தரையில் முளைத்திருந்த புல்வகைகள் பச்சை பசேலென்று இருப்பதை நோக்கினார். இந்த புல் ஏன் பச்சை நிறமாக இருக்கிறது? என்று அவர் சிந்தித்தபோது, வயல்களில் ‘சிலா சத்து’ (GYPSUM) வைக்கொண்டு சில எழுத்துக்கள் எழுதப்பட்டிருப்பதுபோலப் பார்த்தார். இந்த சிலாசத்துக்கள் விழுந்த இடங்களிலே மட்டும் புற்கள் பச்சை நிறமாக இருக்கின்றதே ஏன் என்று அவர் ஆராயலானார்.

வயலில் விளையும் பயிர்கள் வளமாக இருக்க வேண்டுமா? ‘சிலா சத்து’ வைத்தெளிக்க வேண்டும் என்று பிராங்ளின் கூறியதைக்கேட்டு, அந்த நாட்டு விவசாயிகளில் பலர், பெஞ்சமினுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்றார்கள்.

ஏன் அந்த விவசாயிகள் அவ்வாறு கூறினார்கள்? அவர்கள், அன்று வரை பயிர்களுக்கு செயற்கை உரம்இடுவதைப் பற்றிக் கேள்விப்பட்டதே இல்லையாதலால், அவரைப் பைத்தியம் என்று தூற்றலானார்கள்.

ஆனால், இப்போதுள்ள விவசாயிகள் அனைவரும் இயற்கை உரம் இடுவதையே மறந்து விட்டார்கள்.

செயற்கை உரமிடுங்கள் என்று அரசு விளம்பரம் செய்து அந்த உரங்களை விற்பதும், விவசாயிகளும் செயற்கை உரங்களை இடுவதற்கே முக்கியத்துவம் கொடுப்பதுமான விவசாயம் தான் நமது நாட்டில் அதிகமாக நடக்கின்றது. இது பெஞ்சமின் கண்டுபிடித்த உர முறையாகும்.

புயல், சூறாவளிகள், விஷப்பூச்சிகளால் பயிர்கள் அழிவதை நாம் ஆண்டாண்டு தோறும் பார்க்கின்றோம். அவ்-