பக்கம்:பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/58

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

பெஞ்சமின் ஃபிராங்ளினின்

ஆய்வு அறிவால், மின்சாரம் என்றால் என்ன? அது ஒரு திரவப் பொருள் என்பதைக் கண்டு பிடித்தார்.

அந்த மின்சாரத்தில் இருவகை வேறுபாடுகள் இருக்கின்றன. ஒன்று நெகட்டிவ், மற்றொன்று பாசிட்டிவ் என்பதை உலகிலேயே முதன் முதலாகக் கண்டு பிடித்த முதல் மனிதரே பெஞ்சமின் ஃபிராங்ளின் தான்.

மின்சாரம் என்பது மின்னல் ஓட்ட பிளம்புகளை உள்ளிழுக்கவும், வெளியே எறியவும் கூடிய ஒரு கூர்மையான பொருள்களுக்குள்ள சக்தியைப் பற்றியும், பேசினார், அதற்கு இடிதாங்கி என்று பெயரிட்டார்.

மழைமேக வானத்தில் இடி, பேரிடியாக இடிக்கும் போது, அந்த இடி எங்கே விழுகின்றதோ அந்த இடம் தீப்பிடித்து எரிந்து கருகிவிடும் அவ்வளவு நெருப்புச் சக்தி கொண்டது இடி. அந்த இடி வீடுகளின் மீது விழுந்தால் அந்த வீடே எரியும். அதனால்தான் பெரிய பெரிய பங்களா கட்டுபவர்கள், கோட்டைகளை உருவாக்குபவர்கள், பல அடுக்குமாடி கட்டிடங்களை எழுப்பி முடிப்பவர்கள், இறுதியாக அந்தக் கட்டடத்தின் உச்சிகளில் கூர்மையான இரும்புக்கம்பிகளை வைத்து அதைப்பூமியில் பதியுமாறு இணைப்பார்கள். அப்படிச் செய்வதால், எங்கே இடி விழுந்தாலும், அந்த இரும்புக்கம்பி விழுகின்ற இடியை இழுத்து பூமிக்குள் புகுத்தி விடும். இந்த இடி தாங்கியை முதன் முதலாக உலகுக்கு கண்டு பிடித்துக்கொடுத்தவரே பெஞ்சமின்தான்.

ஜன்னல் கண்ணாடியிலிருந்து எடுத்த பதினொன்று கண்ணாடிப்பட்டைகள் மெல்லிய ஈயத்தட்டுக்கள், பட்டு நூல்கள், ஈயக்கம்பி போன்ற வெறும் இந்த பொருட்களைக் கொண்டே மின்சார பேட்டரியை அதாவது டார்ச் லைட்டைக் கண்டுபிடித்தவர் பெஞ்சமின். இப்போது கூட கிராமப்புற வீடுகளிலே பேட்டரி இல்லாத வீடே கிடை-