பக்கம்:பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/6

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

பெஞ்சமின் ஃபிராங்ளினின்

மேதினியில் மேன்மை பெற்ற ஒவ்வொரு பேரறிஞர்களும், தத்துவ ஞானிகளும், வானியல் வித்தகர்களும், மருத்துவ சித்தர்களும், மனோதத்துவ நிபுணர்களும் அரசியல் அறிஞர்களும், ஆன்மிக ஞானிகளும் இயல், இசை, நாடக முத்தமிழ் கலைஞர்களும், அவரவர் அறிவாராய்வின் தகுதி திறமைக்கேற்ப, ஒவ்வொரு துறையிலும் ஊடுருவி, ஒருவர் ஒரு துறையிலும் ஒருவர் பல துறைகளிலும் ஆழமாகச் சிந்தித்து அற்புதக் கண்டு பிடிப்புகளை நமக்கு வழங்கி மறைந்துள்ளார்கள்.

அவை அனைத்தையும் இந்த உலகம் இன்றும் அனுபவித்து வாழ்ந்து கொண்டிருக்கின்ற அதிசயங்களை நாம் படித்துக் கொண்டிருக்கின்றோம்- பார்த்து, மகிழ்கின்றோம்.

ஆனால், பெஞ்சமின் ஃபிராங்ளின், எதனெதனை எண்ணியெண்ணிச் சிந்தனை செய்தாரோ, அந்த துறைகளிலே எல்லாம் வெற்றிக் கொடிகளைப் பறக்க விட்ட செயல் வீரராகத் திகழ்ந்தார்.

அமெரிக்க குடியேற்ற நாடுகளிலே ஒன்றான போஸ்டன் துறைமுக நகரிலே பிறந்த அந்த மாமேதையின் கண்டு பிறப்புச் சாதனைகள் ஒன்றல்ல இரண்டல்ல; எண்ணற்றன. அவை அத்தனையும் இன்றும் மனித வாழ்க்கைக்கு ஈடிலா நன்மை பயந்து கொண்டிருப்பதை மக்கள் நாள்தோறும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். இதோ அவர் கண்டு பிடித்த சாதனைகளின் பட்டியல்:

1. அச்சாளர் பணியிலே சேர்ந்த பெஞ்சமின் ஃபிராங்ளின், அமெரிக்காவிலே முதன் முதலாக அன்று வரை பழக்கத்திலே இல்லாத காகித நாணய முறையைக் கண்டு பிடித்து பணப்புழக்கத்தை மக்களிடம் வழக்கப்படுத்தினார்.

2. அந்த நாணயத்தை எப்படிச் செய்வது என்பதைச் சிந்தித்து, முதன் முதலாக தாமிரத் தகட்டின் மூலமாக,