பக்கம்:பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/61

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

59

கலைக் கழகமும், ஹார்வார்டு பல்கலைக் கழகமும், வில்லியம் மேரி கல்லூரியும் பெஞ்சமின் ஆய்வையும் ஆற்றலையும் பாராட்டிக் கெளரவப் பட்டங்களை வழங்கின.

மிக அற்பமான வசதிகளைக் கொண்டே மிக அரிய செயல்களைச் சாதிக்க முடியும், அதற்கு எவ்வித முடிவும் எப்போதுமில்லை என்பதை மெய்ப்பித்துக் காட்டிய மாமனிதர் பெஞ்சமின் பிராங்ளின்.

அரசியல் துறையில் பெஞ்சமின் காலடி

பெஞ்சமின் ஃபிராங்ளின் ஓர் இராஜதந்திரி ராஜதந்திரி! என்றால் என்ன?

நாட்டு மக்கள் முழுவதும் எதிர்பார்த்து ஏங்கி நிற்கும் ஓர் அரிய பிரச்னையை எவனொருவன் தொய்வில்லாமல், தோல்வியில்லாமல் செய்து வெற்றி பெறுகிறானோ, அந்த வெற்றிக்கு வருந்தி அழைக்கப்படுகிறானோ அவனே ராஜதந்திரயாவான். அதற்கான அறிவு நுட்பமும், அஞ்சா நெஞ்சமும், அதி சாதுர்ய சிந்தனைகளும் மின்னலடிப்பது போல மூளையிலே மின்னி எழுந்து அவனுக்குள் ஒளிதர வேண்டும்.

பெஞ்சமின் ஃபிராங்ளின், அமெரிக்காவின் ராஜதந்திரிகளிலே ஓர் அரிய அறிஞராகவும், மிகச்சிறந்த ராஜதந்திரியாகவும் மிளிர்ந்து விளங்கியதால், அவர் மக்களால் பெரிதும் போற்றப்பட்டார். அதனால், அவரை ஓர் அரசு அங்கமாகவே மதித்து, தங்களது சுதந்திரப் போராட்டங்களுக்கு உதவியாக இருக்குமாறு அவர் கேட்டுக் கொள்ளப்பட்டார்.

பெஞ்சமினின் பொதுமக்கள் தொண்டு அவரை மாஜிஸ்திரேட்டாக நியமித்ததிலிருந்தே ஆரம்பமாயிற்று எனலாம். பிலடெல்பியா நகராட்சி அவரை ஓர் உறுப்பின-