பக்கம்:பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/65

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

63

குடியேற்ற நாட்டவரிடையே அதிகக் கோபம் பொங்கி எழுந்தது. எனவே, அனைவரும் பெஞ்சமின் பணியை ஒருமுகமாகக் குறைகூறி வந்தார்கள்.

‘நாம் ஒரு தனி மனித சமுகமாக இருந்த காலத்திலிருந்து; என்றைக்கும்-இப்போது உள்ளதைப்போல் இங்கிலாந்திலே தம் நண்பர்கள் இவ்வளவு குறைவாக இருந்த தில்லை என்று நினைக்கிறேன்’ என்று மனம் நொந்தார்.

ஆயினும், உண்மையான ராஜதந்திரியாக, விடாப் பிடியாக, பெஞ்சமின் தங்கி, எந்தெந்த காரணங்கள் மீது இங்கிலாந்து அரசோடு போராட முடியோ அதற்கேற்பவே செயலாற்றி வந்தார். காலம் நகர்ந்து நகர்ந்து முதுமையும் வந்து மோதியது. வயதும் ஏறியபடியே இருந்தது. இருமல், ஜலதோஷம் ஊளைச் சதைநோய் மற்றும் இதர நோய்களால் அவர் தாக்கப்பட்டார். அவர், தனது வீட்டின் மீது அதிகமாக ஏக்கம் பிடித்தவரானார்.

அப்போது, பிலடெல்பியா நகரிலே இருந்த அவரது மனைவி டிபோரா மரணமடைந்து விட்டாள் என்ற செய்தி இடிபோலவந்து தாக்கியது. அவ்வளவுதான், மனமுடைந்த சோகத்தோடும் துயரத்தோடும் அடுத்தக் கப்பலிலேயே பெஞ்சமின் தனது ஊருக்குப் புறப்பட்டு விட்டார்.

அமெரிக்க யுத்தம் விரைவிலே ஆரம்பமாகி விடும்என்ற சூழ்நிலை நெருங்கி வருவதையும் உணர்ந்தார். அது நீண்ட நாட்கள் நடக்கும் யுத்தமாகவே இருக்கும்என்று பயந்தார். இங்கிலாந்துக்கும் அமெரிக்கக் குடியேற்ற நாடுகளுக்கும் இடையே போர் மூளக் கூடாது என்பதற்காகவே பத்து வருஷங்களாகப்போராடி வந்த மனிதநேயராக பெஞ்சமின் இருந்தார். இருந்தும், எந்த விதப்பயனும் ஏற்படவில்லை.

இவற்றையெல்லாம் சிந்தித்தபடியே பில்டெல்பியா திரும்பினார். வந்ததும்வராததுமாக அவரை பிலடெல்பியா