பக்கம்:பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/68

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

பெஞ்சமின் ஃபிராங்ளினின்

விடுதலை விரும்பியும் உடன் அமர்ந்திருந்தாக வேண்டிய கட்டாய நிலை இருந்தது. காரணம், அவரவர்கள் கருத்துக்கள் என்னவென்பதைக் கண்டறிவதற்குத்தான் அவ்வாறு இருக்க வேண்டிய நிலை.

இதுபோன்ற சம்பவம் ஒன்றில், ஒருவர் சுதந்திரப் பிரகடன தீர்மானத்தைக் கிழித்து சபையிலே எறிந்தார். அவை அல்லோல கல்லோலப்பட்டுக் கொண்டிருப்பதைக் கவனமாகப் பார்த்துக்கொண்டிருந்த பெஞ்சமின் ஃபிராங்ளின், “இந்த கிழித்தெறியும் சம்பவம், எனக்கு ஜான் தாம்சனை நினைவுப் படுத்துகிறது” என்றார்.

அமெரிக்க காங்கிரஸ் சபையில் உடனிருந்த தாமஸ் ஜேபர்சன் ஜான் தாம்சன் என்றால் யார்? என்று கேட்டார்.

ஜான் தாம்சன் எனது நண்பர்களிலே ஒருவர். அவர் தொப்பிகள் செய்யும் கடையிலே குமாஸ்தாவாக இருந்தவர். நாளடைவில் சொந்தத்திலே தொப்பிகளைத் தயாரித்து விற்கும் நிலைக்கு முன்னேறியவர். அவரது தொழிலை மக்கள் அறிய வேண்டும் என்பதற்காக ஒரு விளம்பரப் பலகையில் தொப்பி போன்ற படம் ஒன்றை எழுதி அதன் கீழே “தொப்பிக்காரன் ஜான் தாம்சன் தொப்பிகளைத் தயாரித்து ரொக்கப் பணத்திற்கு விற்பவன்” என்பதே அந்த விளம்பரப் பலகையில் எழுதப்பட்ட வாசகமாகும்.

இந்த விளம்பரம் எப்படி இருக்கிறது? அதைப்பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள்? என்பதை அறிய விரும்பி ஒரு விளம்பரக்குழுவை நியமித்து அபிப்பிராயம் கேட்டான் ஜான் தாம்சன்.

குழுவிலுள்ள ஒருவர் கருத்துக் கூறும்போது, தாம்சன் அவர்களே, தொப்பிகளைத் தயாரித்து விற்பவன்” என்று