பக்கம்:பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/7

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

5

பலவித டிசைன் ஓவியங்களை எழுதி வெட்டி அச்சடிக்கும் நாணயங்களை மக்களுக்குச் செய்து தந்தார்.

3. சேறும் சகதியும் சாக்கடையுமாயிருந்த பிலடெல் பியாநகர் வீதிகளை, நகர மக்கள் சுத்தமாக நடமாடிட நடைமேடை தளவரிசைகளை அமைத்துத் தந்தார்.

4. அவ்வாறு அமைக்கப்பட்ட வீதிகளைச் சுத்தப்படுத்த ஒருவருக்கு ஆறு பென்ஸ் சம்பளம் என்று பேசி, நகர தெருக்களைக் கூட்டுமாறு ஆட்களை வேலைக்கு அமர்த்தினார். அவர்களுக்குரிய கூலியை அந்த தெருவிலே வசிப்பவரிடமே வசூலித்துக் கொடுத்தார்.

5. வீடுகளிலே உள்ள நடுத்தரவயதுக் கிழவிகளைத் திரட்டி அவர்களுக்கும் ஒரு சம்பளம் பேசி, அந்த தெருக் கூட்டியாளர்கள் சேகரித்துக் குவித்து வைத்துள்ளக் குப்பைக் கூளங்களை, புழுதிகளை எல்லாம் அள்ளி ஓரிடத்திலே குவியலாகக் கொட்டிக் குவிக்கச் செய்தார்.

5. குவிந்துள்ள குப்பைகளை எல்லாம் குதிரை வண்டிகளிலே வாரிப் போடச் செய்து, அந்த நகரத்தின் ஊர் கோடி ஒதுக்குப் புறத்திலே பள்ளம் ஒன்றை வெட்டிக் கொட்டுமாறு பணித்தார். இதற்கான பணச் செலவை அந்த ஊராரிடமே வசூல் செய்து கொடுத்தார்.

7. தெருப்பாதைகளிலே குண்டும் குழியுமாகக் காணப்பட்ட சாலைகளை எல்லாம் கற்களால் பாவி சீர் செய்து மக்களை நடமாடவைக்கும் சாலைகளாக்கி நடைமேடைகளைப் போட்டார்.

8. தெருக்களிலே மெழுகுவர்த்தி மூலம் ஒளி வழங்கியதுபோக முதன் முதலாக உருண்டை வடிவமான கண்ணாடி வடிவமாக இருந்த விளக்குகளை, அதிக ஒளி வழங்கும் நான்கு கண்ணாடி சதுரத்துண்டுகள் பதிக்கும் சதுரவிளக்குகளைப் போட ஏற்பாடு செய்தார். அதனால்