பக்கம்:பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/81

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

79

கொள்ளும் உரிமைதான். மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையே தோன்றும் பிரச்னைகளில் மெய்மை, நேர்மை, முழுமை இந்த மூன்றும் எனது வாழ்வுக்கு வளத்தை வழங்காதா? என்று கருதியே வாழ வந்திருக்கிறேன்.

◯ காதல் என்றால் என்ன? நீ காதலிக்கப்பட வேண்டும் என்றால், நீ காதலிப்பவனாகவும், காதலுக்கு உகந்தவனாகவும் இருக்க வேண்டும்.

◯ எங்கே காதல் இல்லாமல் திருமணம் ஆகின்றதோ அங்கே திருமணமில்லாமல் காதலும் இருக்கும்.

◯ அடிக்கடி வெட்டப்படும் மரமோ, அடிக்கடி பிரிந்து போகும் குடும்பமோ, நிலையான மரத்தையும், நிலையான குடும்பத்தையும் போலச் செழித்து ஓங்கியதைக் காண முடியாது.

◯ ஆணும்-பெண்ணும் ஒன்று சேர்வதிலேதான் மனிதத் தன்மையை பரிபூரணமாக்குகின்றது.

◯ திருமணம் ஆகாத தனி மனிதன், அரைகுறையான மிருகம்தான். பாதிக் கத்திரிக்கோல்போல் பார்ப்பவர்களுக்குத் தோற்றமளிப்பான்.

◯ பெண்கள் எல்லாம் புத்தகங்களா? அப்படியானால், நான் ஆண்டாண்டு தோறும் பெண்ணை மாற்றியமைக்கும் பஞ்சாங்கமாக இருப்பேன்.