பக்கம்:பெண்களும் பேரழகு பெறலாம்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

s பெண்களும் பேரழகு பெறலாம் I9 ★ Yk செயலாற்றக் கூடிய தேக சக்தியைச் சொரிகிறது. உடலுக் குத் தேவையான தசைகளைத் தந்து செழுமைப் படுத்துகிறது. உள்ளுறுப்புகளைத் தூய்மைப் படுத்தி, வலிமை யுள்ளனவாக மாற்றுகிறது. நரம்புகளை வலியதாக்கி, நயம் படப் பணியாற்றத் தூண்டுகிறது. தேவையற்ற தசைப் பகுதிகளை நீக்கிவிட்டு, திறன் மிகுந்த தசைகளாக மாற்றி, தோற்றத்தில் ஒப்பற்ற மலர்ச்சியை உண்டு பண்ணுகிறது. அதிக உடல் எடையுடன் அவதிப் படுகின்ற சகோதரிகளுக்கு, உடல் எடையைக் குறைத்து, இயல்பாக, எளிதான வாழ்வை வாழச் செய்கிறது. உருண்டையான மூங்கிலைப் போன்ற தோள்களை உருவாக்கி, உண்மையழகை, கலையழகைத் தருகிறது. அருவெறுப்புத் தரும் நடையை மாற்றி நளினமாக நடக்கச் செய்கிறது. வளர்ச்சியுறாத மார்பகத்தை வளர்த்து, பெருமை கொள்ள வைக்கிறது. அடிக்கடி அசீரணத்தால் அவதிப் படு கின்ற வர் களுக்கு அதனை நீக்கி, உணவைச் சுவைத்து உண்ணச் செய்கிறது... மலச்சிக்கலைத் தவிர்த்து மனம் மகிழ வைக்கிறது.